உ.பி-யில் பயங்கரம்..! மாஃபியா டான் அதிக் அகமது, அவரது சகோதரர் சுட்டுக் கொலை..!
உத்தரபிரதேசத்தில் மாஃபியாவாக மாறிய அரசியல்வாதி அதிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
உமேஷ் பால் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட கைதியான மாஃபியாவாக மாறிய அரசியல்வாதியும் அதிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் நேற்று (சனிக்கிழமை) இரவு பிரயாக்ராஜில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.
எம்எல்ஏ ராஜு பால் கொலை :
2005 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் கொலை வழக்கில் அதிக் அகமது குற்றம்சாட்டப்பட்டார். ராஜு பால் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ் பால் பிப்ரவரி 28, 2006 அன்று கடத்தப்பட்டார். இதையடுத்து உமேஷ் பால், இந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி பிரயாக்ராஜில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த இரண்டு வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக அதிக் அகமது குற்றம்சாட்டப்பட்டார்.
உமேஷ் பால் கடத்தல் வழக்கில் தீர்ப்பு:
உமேஷ் பால் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாஃபியா டான் அதிக் அகமது பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில், ஆதிக் அகமதுவின் சகோதரர் அஷ்ரப் உட்பட மற்ற குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டு நிலையில் உமேஷ் பால் கடத்தல் வழக்கில் பிரயாக்ராஜ் எம்பி-எம்எல்ஏ நீதிமன்றம் மாஃபியாவாக மாறிய அரசியல்வாதியான அதிக் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அதிக் அகமது சுட்டுக்கொலை :
இந்நிலையில், பிரயாக்ராஜில் மருத்துவ பரிசோதனைக்காக அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் நேற்று இரவு காவல்துறையினர் பாதுகாப்பில் அழைத்துச்செல்லப்பட்டனர். அப்பொழுது, செய்தியாளர்கள் போல் மாறுவேடமிட்டு வந்தவர்கள் அவர்கள் அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவை பலமுறை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.
144 தடை உத்தரவு :
இந்த சுப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட செய்தியாளர் ஒருவர் காயமடைந்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சுப்பாக்கிச்சூடு நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுவதால் உ.பி.யின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
உயர்மட்ட விசாரணை :
மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ள நிலையில் இது குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட நீதித்துறை ஆணையத்தையும் முதல்வர் அமைத்துள்ளார். முன்னதாக, இரண்டு நாட்களுக்கு முன்பு ஜான்சியில் நடந்த என்கவுன்டரில் அதிக் அகமதுவின் மகன் ஆசாத்தும் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
याद नहीं आता ऐसी कोई तस्वीर कभी देखी
हो। #AtiqAhmadKilled pic.twitter.com/5ShrFerGaF— Sweta Singh (@SwetaSinghAT) April 15, 2023