இந்தியாவில் குழந்தைகள் தினம், நவம்பர் 14 இல் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் மாதம் 14 ஆம் தேதியை ஆண்டு தோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம்.
குழந்தைகள் மீது நம் நேரு எப்பொழுதும் அளவற்ற அன்பைக் கொண்டிருந்தார். குழந்தைகளும் நேரு மீது அன்புடனேயே இருந்தனர். குழந்தைகளும் அவரை அன்புடன் நேரு மாமா என்று அழைத்து வருகின்றனர். ஜவஹர்லால் நேரு 1889ஆம் ஆண்டு நவம்பர் 14 இல் அலகாபாத்தில் பிறந்தார்.
நேரு, பிரதமராக இருந்த போதும், இடையிராத வேலைகளுக்கு மத்தியில் குழந்தைகளுடன் உரையாடி மகிழ்வார். எவ்வளவு அழுத்தமான மனநிலைகள், கவலைகள் இருந்தாலும் குழந்தைகளுடன் நீங்கள் பேசும்போது, குழந்தைகள் உங்களின் கவலைகளை போக்கிவிடுவார்கள்.
நேரு அரசியலில் எவ்வளவு தேறியவராக இருந்தாலும் அவர் உள்ளத்தில் குழந்தை மனம் கொண்டவர், இதனால் தான் குழந்தைகள் இன்னமும் அவரிடத்தில் மிகுந்த அன்புடன் இருந்து வருகின்றனர்.
நேரு பிறந்த நாளான நவ-14இல் குழந்தைகள் தினத்தன்று இந்தியா முழுதும் ஒவ்வொரு பள்ளியிலும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, என அவரின் பெருமைகளைப் போற்றும் வகையில், அவரது நினைவாக நடத்தப்பட்டு வருகிறது.
குழந்தைகளின் முன்னேற்றத்தில் தான் நாளைய இந்தியா வளமாகும் என்ற கருத்தை உடைய நேரு குழந்தைகளின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை நிறைவேற்றினார், மேலும் குழந்தைகளுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்றே சொல்லலாம்.
குழந்தைகளின் உரிமையை பாதுகாக்கவும், அவர்களது வளர்ச்சிக்கு உழைப்பதும் குழந்தைகள் தினத்தின் அடையாளமாக கருதப்பட்டு வருகிறது. குழந்தைகள் அனைவரும் கல்வி கற்று அதன்மூலம் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்ற வேண்டும் என்பதில் நேரு தெளிவாக இருந்தார்.
1954-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நவம்பர் 20 ஆம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. நம் இந்தியாவில் 1964 ஆம் ஆண்டு நேரு மறைந்த பிறகு அவரது நினைவாக, குழந்தைகள் மீது அவர் கொண்ட பற்று காரணமாக, அவரது பிறந்த நாளை நவ-14 குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…