பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்- குழந்தைகள் தினம்! ஆனது எப்படி?

Default Image

இந்தியாவில் குழந்தைகள் தினம், நவம்பர் 14 இல் கொண்டாடப்பட்டு வருகிறது.  சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் மாதம் 14 ஆம் தேதியை ஆண்டு தோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம்.

குழந்தைகள் மீது நம் நேரு எப்பொழுதும் அளவற்ற அன்பைக் கொண்டிருந்தார். குழந்தைகளும் நேரு மீது அன்புடனேயே இருந்தனர். குழந்தைகளும் அவரை அன்புடன் நேரு மாமா என்று அழைத்து வருகின்றனர். ஜவஹர்லால் நேரு 1889ஆம் ஆண்டு நவம்பர் 14 இல் அலகாபாத்தில் பிறந்தார்.

நேரு, பிரதமராக இருந்த போதும், இடையிராத வேலைகளுக்கு மத்தியில் குழந்தைகளுடன் உரையாடி மகிழ்வார். எவ்வளவு அழுத்தமான மனநிலைகள், கவலைகள் இருந்தாலும் குழந்தைகளுடன் நீங்கள் பேசும்போது, குழந்தைகள் உங்களின் கவலைகளை போக்கிவிடுவார்கள்.

நேரு அரசியலில் எவ்வளவு தேறியவராக இருந்தாலும் அவர் உள்ளத்தில் குழந்தை மனம் கொண்டவர், இதனால் தான் குழந்தைகள் இன்னமும் அவரிடத்தில் மிகுந்த அன்புடன் இருந்து வருகின்றனர்.

நேரு பிறந்த நாளான நவ-14இல் குழந்தைகள் தினத்தன்று இந்தியா முழுதும் ஒவ்வொரு பள்ளியிலும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, என அவரின் பெருமைகளைப் போற்றும் வகையில், அவரது நினைவாக நடத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகளின் முன்னேற்றத்தில் தான் நாளைய இந்தியா வளமாகும் என்ற கருத்தை உடைய நேரு குழந்தைகளின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை நிறைவேற்றினார், மேலும் குழந்தைகளுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்றே சொல்லலாம்.

குழந்தைகளின் உரிமையை பாதுகாக்கவும், அவர்களது வளர்ச்சிக்கு உழைப்பதும் குழந்தைகள் தினத்தின் அடையாளமாக கருதப்பட்டு வருகிறது. குழந்தைகள் அனைவரும் கல்வி கற்று அதன்மூலம் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்ற வேண்டும் என்பதில் நேரு தெளிவாக இருந்தார்.

1954-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நவம்பர் 20 ஆம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. நம் இந்தியாவில் 1964 ஆம் ஆண்டு நேரு மறைந்த பிறகு அவரது நினைவாக, குழந்தைகள் மீது அவர் கொண்ட பற்று காரணமாக, அவரது பிறந்த நாளை நவ-14 குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்