புதுச்சேரியில் முட்டும் அதிகாரப்போட்டி..!யாருக்கு தான் அதிகாரம்..? தீர்ப்பு ஒத்திவைப்பு..!
- புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- முதல்வரின் அன்றாட பணியில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.மேலும் அம்மாநிலத்தின் துணைநிலை ஆளுனராக கிரண்பேடி உள்ளார்.
அம்மாநில முதல்வர் மற்றும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே அதிகார போட்டி அவ்வபோது ஏற்பட்டு வந்த நிலையில் அது உச்சத்தை தொட்டு நீதிமன்றம் வரை சென்றது.இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் முதல்வரின் அன்றாட பணிகளில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்று உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் முதல்வரின் அன்றாட பணிகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற இந்த உத்தரவை எதிர்த்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மேல்முறையீடு செய்தார்.இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.