#Justnow:மக்களே கவனிக்கவும்…இனி இதற்கு பான் (அல்லது) ஆதார் எண் கட்டாயம் !
வருகின்ற மே 26 முதல் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ,நிரந்தரக் கணக்கு எண் (பான்) அல்லது அல்லது ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என மத்திய மறைமுக வரிகள் வாரியம் (CBDT) அறிவித்துள்ளது.
பணத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வரி ஏய்ப்பைத் தடுக்கும் நோக்கில்,மத்திய மறைமுக வரிகள் வாரியம் (CBDT) வருமான வரி விதிகளில் இத்தகைய திருத்தங்களை அறிவித்துள்ளது.அதன்படி,கேஷ் கவுண்டரில் அதிக டெபாசிட் மற்றும் பணத்தை திரும்பப் பெறுபவர்கள் பான் அல்லது ஆதார் எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,புதிதாக வங்கி கணக்கை தொடங்கும்போதும் இந்த விதிமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக,ஏற்கனவே பான் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் கணக்குகளுக்கு இந்த விதி பொருந்தும்.
அதே சமயம்,வணிக வங்கியில் மட்டுமின்றி கூட்டுறவு வங்கி அல்லது தபால் நிலையங்களிலும் கணக்குகள் தொடங்குபவர்கள் மற்றும் ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.இதன் மூலம், வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் தபால் அலுவலகம் உள்ளிட்ட வாடிக்கையாளர் மற்றும் நிதி நிறுவனங்களில் பரிவர்த்தனையைத் தொடங்கும் போது பான் மற்றும் ஆதார் விவரங்களை மேற்கோள் காட்ட வேண்டியது அவசியம்.