ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 31-ம் தேதி முதல் பான் கார்டு செல்லாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இனிமேல் கால நீட்டிப்பு இருக்காது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு வழங்கப்படும் 10 எண்களைக் கொண்ட பான் கார்டின் ஆதார் எண்ணை இணைக்க பலமுறை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனாலும் இதுவரை 30 கோடியே 75 லட்சம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். 17 கோடியே 58 லட்சம் பேர் ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை. இந்த சூழலில், தற்போது வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் அடுத்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், இதுவரை ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் சென்று இணைக்கலாம். இதற்காக ஆவணங்கள் எதுவும் தனியாக தேவையில்லை. ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண் மட்டும் இருந்ததால் போதும். இந்த இரண்டு எண்ணைகளையும் கொடுத்த பிறகு ஆதாரில் உள்ளது போலவே உங்களின் பெயரை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு கேப்சா எனப்படும் குறியீடு அல்லது ரகசிய எண்ணை (OTP) கொடுத்து ஆதார், பான் கார்டை இணைக்கலாம்.
பின்னர் இரண்டும் இணைக்கப்பட்டுவிட்டால் ஆதாரின் கடைசி 4 இலக்க எண்ணுடன் உறுதிபடுத்தப்பட்ட தகவல் வரும். மேலும் குறுஞ்செய்தி மூலமாகவும் இதனை பதிவு செய்யலாம். UIDPAN ஒரு இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்த பிறகு ஒரு இடைவெளி விட்டு பான் கார்டு எண்ணையும் பதிவு செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பினால் இரண்டும் இணைக்கப்பட்டுவிடும். குறிப்பாக பான் கார்டு செல்லாது என்றால் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய முடியாது. மார்ச் 31க்கு பின் எப்போது ஆதார் எண்ணை இணைக்கிறோமோ, அப்போதுதான் பான் கார்டு மீண்டும் செல்லுபடியாகும்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…