பான் அட்டை இனி அடையாள ஆவணம்; பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு.!
பான் அட்டை இனி முக்கிய அரசுத்துறை கொள்கைகளில் பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும் என அறிவிப்பு.
2023-24ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாராளுமன்ற அவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஒரு முக்கிய அறிவிப்பாக அனைத்து அரசு சேவைகளிலும் அடையாள ஆவணமாக பான் எண் பயன்படுத்தப்படும் என அறிவித்தார். இதனால், பான் அட்டை இனி முக்கிய அரசுத்துறை கொள்கைகளில் பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும் என்றார்.
பான் எனப்படும் 10 இலக்க நிரந்தர கணக்கு எண், ஒரு நபர், அல்லது நிறுவனத்திற்கு வருமான வரித் துறையால் வழங்கப்படுகிறது. தேசிய தரவு ஆளுமைக் கொள்கையை அரசாங்கம் கொண்டுவருகிறது, இதனால் KYC செயல்முறையை எளிதாக்கும் என்று அவர் கூறினார்.
நிதி சார்ந்த சேவைகளுக்கான கே.ஒய்.சி என்ற தனிநபர் விவர முறை எளியதாக்கப்படும் என்றும் ஆதார், பான் எண் மற்றும் டிஜிலாக்கர் முறை ஆகியவை தனிநபர் அடையாளத்திற்காக பிரபலப்படுத்தப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், ரூ.7,000 கோடி மதிப்பீட்டில் இ-கோர்ட் எனப்படும் இணையதளம் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.