தண்ணீருக்கு தவிக்கும் தலைநகரம்..!இந்திய தலைநகரத்தில் முதல்வர்- பிரதமர் சந்திப்பு .!

Default Image

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்தார்.

பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  டெல்லியில்  ‘நிதி ஆயோக்’ கூட்டத்துக்கு முன்பாக சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில் தமிழகத்தின் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை வைக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிகின்றன.மேலும் காவிரி பிரச்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி பேசியதாக தகவல் உள்ளது.

இந்த சந்திப்பானது சுமார் 7 நிமிடங்கள் நடந்ததுள்ளது.பிரதமர் மற்றும் முதல்வர் பழனிசாமியின் சந்திப்பின்போது அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related image
தமிழகத்தின் தலைநகரமாம் சென்னை தண்ணீருக்கு தவித்து கொண்டிருக்கிறது.இந்த நிலையில் இந்த பிரச்சனை மக்களை கடுமையாக பாதித்து உள்ளது.காவேரி தொடர்பாக கர்நாடகவும் கை விரிக்க,மழையும் பொய்த்து போனது.
Related image
இப்படி தமிழகம் நான்கு பக்கங்களிலும் தண்ணீருக்கு அலைமோதி கொண்டிருக்கும் நிலையில் முதல்வர் மக்களை சந்தித்து குறைகளை ஆராயமால் இருப்பது வேதனை  அழிப்பதாக மக்கள் குமுறுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்