காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்..!
காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.
எல்லை நெடுகிலும் பாகிஸ்தான் படைகள் கடந்த சில நாட்களாக அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இன்று கத்துவா மாவட்டத்துக்குட்பட்ட ஹிராநகர் செக்டாரில் இந்தியப் பகுதிகள் மீது பாகிஸ்தான் படைகள் பீரங்கிகள் உள்ளிட்டவற்றால் கடும் தாக்குதல் நடத்தின.
இதில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். கடந்த 18 மணி நேரத்தில் இது 4-வது தாக்குதல் என்று கூறப்படுகிறது.