பாகிஸ்தானுக்கு பதிலடி தாக்குதல்…எங்கு , எப்போது , எப்படி…முடிவு செய்யுங்கள்…நிர்மலா சீத்தாராமன் ஆவேசம்…!!
- புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எப்போது , எங்கு , எப்படி என்பதை ராணுவ வீரர்களே முடிவு செய்து கொள்ளலாம்.
- புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானிடம் எந்த ஆதாரத்தையும் கொடுக்க முடியாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்.
காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இதுக்கும் , பாகிஸ்தானுக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறி தகுந்த ஆதாரம் கேட்கின்றார்.
இதுகுறித்து , டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவிக்கையில் , புல்வாமா தாக்குதலில் மக்கள் அடைந்துள்ள கோபத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை . பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது எப்படி , எப்போது , எங்கு என்பதை அவ்ர்களே முடிவு செய்யலாம் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் , மும்பை தாக்குதல் தொடர்பாக பலமுறை ஆதாரங்களை கொடுத்தும் ஒன்றுமே செய்யாத பாகிஸ்தான் தற்போதும் அதே போன்று கூறுகின்றது. பாகிஸ்தானிடம் எதையும் கொடுக்க இந்தியா தயாராக இல்லை என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்