உளவு பார்த்த பாகிஸ்தானின் ட்ரோன் …சுட்டு வீழ்த்தியது இந்தியா..நீடிக்கும் போர் பதற்றம்…!!

Default Image
  • பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாமை தாக்கியது.
  • இந்நிலையில் பாகிஸ்தானின் ஆளில்லா ட்ரோன் உளவு பார்க்கும் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்த முகாம்கள் இந்தியாவின் தாக்குதலில் தரை மட்டமாக்கப்பட்டது.

இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகின்றது.ஆனால் இந்தியா தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றது.மேலும் தற்போது மத்திய அரசு இந்தியா பயங்கரவாதிகள் முகாம் மீது சக்திவாய்ந்த 6 குண்டுகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இரண்டு நாட்டு எல்லை பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட்டுள்ளது. குஜராத்தில் பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் நாட்டின் ஆளில்லா ட்ரோன் விமானம் உளவு பார்த்ததை இந்திய ராணுவத்தின் ஸ்பைடர் என்ற கருவி சுட்டு வீழ்த்தியது.இதையடுத்து இரு மாநில எல்லையிலும் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review
Su Venkatesan MP
Court - Nellai
low pressure - Bay of Bengal
amla gulkand (1)