அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாக்…இந்தியா பதிலடி தக்குதலால் பின்வாங்கியது பாக். படை…!!
- பாகிஸ்தான் படை தொடர்ந்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
- அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் படைகளுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்ததால் பாகிஸ்தான் வீரர்கள் பின்வாங்கினர்.
இந்திய நாட்டின் எல்லைக்கோடு அருகே பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவம் கடுமையான தக்க பதிலடி கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி என்ற இடத்தில் நேற்று மாலை ஆறரை மணி அளவில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தினது. இதையடுத்து பதில் தாக்குதலை இந்திய படை வீரர்களும் நடத்தினர்.
இந்நிலையில் இந்திய எல்லைக் கோட்டருகே துப்பாக்கிச்சூடு சத்தம் தொடர்ந்து கேட்டபடியே இருந்ததாக சொல்லப்படுகின்றது.இந்த சம்பவ நிகழ்வுகளை இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் கலோனல் தேவேந்தர் ஆனந்த் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதே போல நவ்ஷேரா பகுதியில் உள்ள கலால் என்ற இடத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதற்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்ததாகவும் இதையடுத்து பாகிஸ்தான் படை வீரர்கள் பின்வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து அத்துமீறி தாக்கியது குறிப்பிடத்தக்கது.