14 Pakistani Arrest [file image]
NCB : இந்தியாவில், குஜராத் மாநிலத்தின் கடற்கரை எல்லையில் போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்கள் பிடிப்பட்டுள்ளனர்.
போதை பொருள் கட்டுப்பட்டு பணியகம் (Narcotics Control Bureau) மற்றும் குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு படை (Anti-Terrorism Squad – ATS) இணைந்து நடத்திய ஒரு நடவடிக்கையில் இந்தியாவின் குஜராத்தில் உள்ள சர்வதேச கடல் எல்லையின் அருகில் சுமார் 90 கிலோ போதைப் பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக உளவுத்துறையினரின் தொடர் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு அதன் அடிப்படையில் நடத்திய இந்த சோதனையில் தற்போது 14 பாகிஸ்தான் வாசிகள் பிடிபட்டுள்ளனர். மேலும், இதே போல் இதற்கு முன்னும் இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் NCB மற்றும் இந்திய கடற்படை ஆகியோர் இணைந்து 3,132 கிலோ இதுவரை 1000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள போதைப் பொருட்களைக் கைப்பற்றி உள்ளனர்.
இதில் அப்போது ஐந்து பேரை கடற்படையினர் கைது செய்தனர். அதில் பிடிபட்ட அந்த 5 பேரும் பாகிஸ்தான் அல்லது ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் என்று NCB மற்றும் இந்திய கடற்படை சந்தேகிக்கப்படும் நிலையில் தற்போது இந்த கைதும் நடைபெற்றுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தற்போது நடைபெற்ற கைதையும் சேர்த்து மொத்தம் 3 கைதுகள் NCB மற்றும் இந்திய கடற்படையினர் செய்த்துள்ளனர்.
இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இந்திய கடற்படையுடன் இணைந்து போதை பொருள் கட்டுப்பட்டு நிர்வாகமும் (NCB) மேற்கொண்டது. அதில் முதலில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் குஜராத் கடற்கரையில் ஒரு கப்பலில் இருந்து 221 கிலோ மெத்தம்பேட்டமைனை (Methamphetamine) கைப்பற்றினார்கள் . அதன் பின் அதே ஆண்டியின் அக்டோபர் மாதத்தில் கேரள கடற்கரைக்கு அருகே ஒரு கப்பலில் இருந்து மற்றொரு 200 கிலோ உயர்தர போதை பொருளான ஹெராயினை கைப்பற்றினர்.
அதை தொடர்ந்து 2-வதாக கடந்த ஆண்டின் மே மாதத்தில் பாகிஸ்தானில் இருந்து வந்த ஒரு கப்பலில் இருந்து சுமார் 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 2500 கிலோ மெத்தாம்பெட்டமைனை போதை பொருள் கட்டுப்பட்டு பணியகம் (NCB) கைப்பற்றியது. இதனால் அந்த போதைப்பொருளான மெத்தாம்பெட்டமை இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகளில் உள்ள ட்ரக் கார்டெல்களிடம் (Drug Cartel) வந்து சேர்வதற்கு முன்பே முன்பு இந்திய பெருங்கடலில் தடுத்து நிறுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…