அபிநந்தனை கட்டாயப்படுத்தி வீடியோ பதிவு செய்த பாகிஸ்தான்!!வீடியோவில் பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்து பேசும்படி நெருக்கடி!!

Default Image
  • நேற்று  இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். 
  • ஆனால் மாலை 4 மணிக்கு வந்த அபிநந்தனை ஒப்படைக்க பாகிஸ்தான் நீண்ட நேரம் எடுத்தது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

புல்வாமா தாக்குதல்: 

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு மட்டும் மவுனம் சாதித்து வந்தது.

இந்தியா பதிலடி: 

Image result for abhinandan

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அதிகாலை மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படைத் தளத்தில் இருந்து மிராஜ் 2000 போர் என்ற 12 விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் உள்ள இடங்களுக்கு சென்றது.சரியாக அதிகாலை 3.30 மணிக்கு மேல் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்தது.

அதேபோல் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்கு பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து வந்தது.

பாகிஸ்தான் விமானப்படை விமானம் அத்துமீறல்:

பின் பிப்ரவரி-27 ஆம் தேதி பாகிஸ்தான் விமானப்படை விமானமான  F16  இந்தியாவிற்குள் அத்துமீறியபோது இந்திய விமானப்படையின்  மிக் 21 போர் விமானத்தால் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

விமானியை காணவில்லை:

ஆனால் அந்த தாக்குதலின்போது மிக் 21 போர் விமானத்தை காணவில்லை.அதேபோல் விமானியையும் காணவில்லை.அந்த விமானி அபிநந்தன். அவர் சென்னையை சேர்ந்தவர்.

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்த விமானி அபிநந்தன்:

பாகிஸ்தானிடம் இது தொடர்பாக கேட்டபோது,  விமானி அபிநந்தன் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தது.

பின்னர் விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் இருக்கும் நிலையில் அவரை மீட்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் நேற்று விடுவிக்கப்படுகிறார் என்று அறிவிப்பு:

இந்நிலையில் இது தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு வெளியிட்டார்.அதில் அபிநந்தன் நேற்று (மார்ச் 1-ஆம் தேதி) விடுவிக்கப்படுவார்.இம்ரான் கான் அறிவித்தவுடன் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி.க்கள் அனைவரும் ஒப்புதல் தெரிவித்தனர்.இதனால் பாகிஸ்தானில் உள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் நேற்று விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவித்தார்.

வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்ட அபிநந்தன்:

அதன்படி  நேற்று (மார்ச் 1-ஆம் தேதி) பாகிஸ்தானின் லாகூா் வரை விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அபிநந்தன், லாகூரில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதிக்கு காா் மூலம் அழைத்து வரப்பட்டாா்.

இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டாா் அபிநந்தன்:

இருநாட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடா்ந்து அபிநந்தன் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டாா்.

 அபிநந்தன் நேற்று இரவு 9 மணிக்கு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அபிநந்தனுக்கு வாகா எல்லையிலேயே இந்தியா சாா்பில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அபிநந்தன் விடுதலை:

ஆனால் நேற்று மாலை 4 மணியளவில் வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்டார் அபிநந்தன்.மாலையிலே அபிநந்தன் ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பின்னர் சுமார் நான்கு மணி நேரத்திற்கு பிறகு இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான்  அபிநந்தனை ஒப்படைத்தது.

காரணம் என்ன?

ஆனால் இந்த நீண்ட நேர போராட்டத்திற்கு  காரணம் என்னெவென்றால்  ஓப்படைக்கப்படும் முன்பு அபிநந்தனிடம் பாகிஸ்தான் வீடியோவை பதிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகி வருகிறது.மேலும் அந்த வீடியோவில்,  பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்து பேசும்படியாக அவருக்கு நெருக்கடி கொடுத்து, இந்த வீடியோ எடுக்கப்பட்டதாவும் தகவல் வெளியாகி வருகிறது.இந்த வீடியோ எடுக்கப்பட்ட காரணத்தினால் தான் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்க , தாமதம் ஏற்பட்டது எனவும் தகவல் வெளியாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்