இந்தியா மீது போர் தொடுக்க பாகிஸ்தானுக்கு ஆர்வமில்லை!!பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

Published by
Venu
  • இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் ரக விமானத்தை இந்தியாய் விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியது.
  • இந்தியா பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று  (பிப்ரவரி 26 ஆம் தேதி) அதிகாலை  மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படைத் தளத்தில் இருந்து 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் உள்ள இடங்களுக்கு சென்றது.சரியாக அதிகாலை 3.30 மணிக்கு மேல் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்தது.இதற்காக 1000 கிலோ வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியதாக இந்திய விமானப்படை  தெரிவித்தது.மேலும் இந்த பகுதிகளில் இருந்த 3(பாலக்கோடு,சாக்கோட்,  முஸாஃபராபாத்) இடங்களில் உள்ள  தீவிரவாத முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.மேலும்  விமானப்படையின் தாக்குதலில் தீவிரவாத தலைவர் மசூத் அசாரின் உறவினர் கொல்லப்பட்டார்.

ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்துள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்தார்.இந்த தாக்குதல் 21 நிமிடங்கள் நீடித்தது.

இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகின்றது.ஆனால் இந்தியா தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றது.மேலும் தற்போது மத்திய அரசு இந்தியா பயங்கரவாதிகள் முகாம் மீது சக்திவாய்ந்த 6 குண்டுகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதேபோல் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்கு பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றது.

பாகிஸ்தான் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது:

இன்று பாகிஸ்தான் ராணுவம் F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் நடத்த வந்தது இதை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியுள்ளது என்று விமானப்படை  தகவல் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் உள்ளிட்ட பாகிஸ்தான் எல்லை பகுதியில் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கபட்டது.இதனால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.இதனால் இந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் தொடர் பதற்றம் நீடித்தது.

அதேபோல்இன்று காலை மிக் 21 பைசன் ஜெட் போர் விமானத்தில் பயணித்த விமானி இன்னும் விமானப்படை தளத்திற்கு திரும்பவில்லை. கமாண்டர் அபிநந்தன் இன்னும் விமானப்படை தளத்திற்கு திரும்பவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர் சந்திப்பு: 

மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுங்கயில்,பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நேற்று தாக்குதல் நடத்தியது .இன்று பாகிஸ்தான் விமானப்படை விமானம் அத்துமீறியபோது இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது.அதேபோல் பாகிஸ்தான்  விமனாத்தை மிக் 21 போர் விமானம் சுட்டு வீழ்த்தியது.ஆனால் அந்த தாக்குதலின்போது மிக் 21 போர் விமானத்தை காணவில்லை.அதேபோல் விமானியையும் காணவில்லை .பாகிஸ்தானிடம் இது தொடர்பாக கேட்டபோது,  விமானி அபிநந்தன் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருப்பதாக பாகிஸ்தான் சொல்கிறது என்று மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார்  தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விளக்கம்: 

Image result for imran khan

இந்நிலையில் இந்தியா மீது போர் தொடுக்க பாகிஸ்தானுக்கு ஆர்வமில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், போர் தொடுக்க பாகிஸ்தானுக்கு விருப்பமில்லை. கட்டாயத்தின் பேரில் தான் பதிலடி கொடுத்தோம். எங்கள் எல்லைக்குள் நீங்கள் அத்துமீறினால் நாங்களும் அத்துமீறுவோம் என்பதை காட்ட தான் தாக்குதல்.போர் நடந்தால் அது என்னுடைய கட்டுப்பாட்டிலோ மோடியின் கட்டுப்பாட்டிலோ இருக்காது.வரலாற்றில் ஏற்பட்ட போர்கள் அனைத்தும் தவறான அனுமானங்களால் உருவானவை. போரை தொடங்குபவர்களுக்கு தெரியாது அது எப்போது முடியும் என்று.மேலும் இந்தியா பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார்.

 

Published by
Venu

Recent Posts

SA vs IND : இரண்டு சதம் …தொடரை கைப்பற்றிய இந்திய அணி! சஞ்சு, திலக் அதிரடியில் துவம்சமான தென்னாப்பிரிக்கா!

ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…

5 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (16/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…

8 hours ago

“கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்கவே மாட்டேன்”…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…

9 hours ago

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…

10 hours ago

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…

11 hours ago

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

12 hours ago