கடந்த 14 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதனால் அங்கு பதற்றம் நிலவியது.இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு மட்டும் மவுனம் சாதித்து வந்தது.
இந்நிலையில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே செயல்பட்டு வந்த பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய விமானப்படை .1000 கிலோ வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியதாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்தது .அதிகாலை 3.30 மணிக்கு இந்த அதிரடி தாக்குதலை இந்திய விமானப்படை நடத்தியதாக தகவல் தெரிவித்துள்ளது.இந்திய விமான படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ரக போர் விமானம் மூலம் இந்த தாக்குதல் நடைபெற்றது.பகுதிகளில் இருந்த பயங்கரவாதிகள் 3 முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
அதே நேரத்தில் பாகிஸ்தானின் எப்.16 ரக விமானமும் பதில் தாக்குதலுக்கு புறப்பட்டது.ஆனால் இந்திய விமானப்படை பலத்தை அறிந்த உடன் பாககிஸ்தான் போர் விமானங்கள் பின் வாங்கியது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா சபையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.மேலும் அமெரிக்கா,ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…