நள்ளிரவில் எல்லை மீறிய பாகிஸ்தான்! பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!
காஷ்மீர் பகுதியில் இந்திய எல்லை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் எதிரெதிர் நாடுகளுக்கு எதிராக பல்வேறு தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படியான சூழலில் நேற்று நள்ளிரவு திடீரென பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் பகுதியில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லை மீறி இந்திய எல்லைக்குள் 2வது நாளாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனை அடுத்து இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ராணுவம் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளது என இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்றாலும், பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லை மீறிய தாக்குதல்கள் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது. இரு நாட்டு போர் நிறுத்த ஒப்பந்தமான சிம்லா ஒப்பந்தந்தை அண்மையில் பாகிஸ்தான் ராணுவம் நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு தான் இந்த தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ளது.
ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு உள்ளூர் பயங்கரவாத அமைப்பான TRF பொறுப்பேற்று இருந்தது. இந்த TRF அமைப்பானது பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் ஆதரவு இயக்கம் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்து ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளது என பாகிஸ்தான் மீது இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இருநாட்டு விசா சேவை நிறுத்தம், தூதரகங்கள் மூடல், சிந்து நதிநீர் பங்கீடு நிறுத்தம், சிம்லா ஒப்பந்தம் நிறுத்தம் என பல்வேறு தடை நடவடிக்கைகளை இரு நாடுகளும் மேற்கொண்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025