இந்தியாவில் ஒலிக்கப்பட்ட ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ முழக்கம்.. 40 பேர் அதிரடி கைது!

Default Image

புனேவில் என்ஐஏ சோதனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற முழக்கமிட்டதால் 40 பேர் கைது.

பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய புகாரின் அடிப்படையில், கடந்த சில தினங்களாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய அலுவலகம், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிரடி சோதனை ஈடுபட்டது. இந்த சோதனையின்போது 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பிஎப்ஐ நிர்வாகிகள் 106 பேரை என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான என்ஐஏ, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ஆக்டோபஸ் என பெயரிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் தீவிரவாத இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று புனேயில் நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் எதிர்ப்பு ஊர்வலத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அமைப்புக்கு எதிரான நாடு தழுவிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) செப்டம்பர் 22 அன்று புனே, கோந்த்வாவில் உள்ள பிஎஃப்ஐ அலுவலகத்தில் சோதனை நடத்தியது.

என்ஐஏ சோதனையின்போது பல்வேறு மாநிலங்களில் பிஎப்ஐ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, PFI உறுப்பினர்கள் புனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே கூடினர். போராட்டத்தின் போது, PFI உறுப்பினர்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற முழக்கங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது.இந்த போராட்டத்தின் போது இந்தியாவுக்கு எதிரான முழக்கம் மட்டுமின்றி, ‘அல்லாஹு அக்பர்’ மற்றும் ‘நாரா இ தக்பீர்’ போன்ற இஸ்லாமிய முழக்கங்களையும் எழுப்பியுள்ளனர்.. போராட்டத்தைத் தொடர்ந்து, குறைந்தது 41 பேரை போலீஸார் கைது செய்து போலீஸ் வாகனங்களில் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சட்டவிரோதமாக கூடியிருந்ததாக 60-70 பேர் மீது புனே காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.எப்ஐஆரில் ரியாஸ் சையத் என்ற நபர் பெயரிடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். போராட்டத்திற்கு PFI முன் அனுமதி பெறாததால், இது அங்கீகரிக்கப்படாத கூட்டம் என்று புனே காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 41 பேர் உட்பட 60க்கும் மேற்பட்டோர் மீது அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காகவும், சட்டவிரோதமாக கூட்டம் நடத்தியதற்காகவும், சாலை மறியலில் ஈடுபட்டதற்காகவும் குற்றம் பதிவு செய்துள்ளோம் என்று மூத்த ஆய்வாளர் பிரதாப் மான்கர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்