கடந்த 14 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு மட்டும் மவுனம் சாதித்து வந்தது.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 26 ஆம் தேதி) அதிகாலை மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படைத் தளத்தில் இருந்து 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் உள்ள இடங்களுக்கு சென்றது.சரியாக அதிகாலை 3.30 மணிக்கு மேல் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்தது.இதற்காக 1000 கிலோ வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியதாக இந்திய விமானப்படை தெரிவித்தது.மேலும் இந்த பகுதிகளில் இருந்த 3(பாலக்கோடு,சாக்கோட், முஸாஃபராபாத்) இடங்களில் உள்ள தீவிரவாத முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.மேலும் விமானப்படையின் தாக்குதலில் தீவிரவாத தலைவர் மசூத் அசாரின் உறவினர் கொல்லப்பட்டார்.
ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்துள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்தார்.இந்த தாக்குதல் 21 நிமிடங்கள் நீடித்தது.
இதன் பின்னர் குஜராத்தின் கூட்ச் பகுதியில் உள்ள விமான தளத்தில் பாகிஸ்தானின் ட்ரோன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பாகிஸ்தானின் போர் விமானங்கள் பதில் தாக்குதலுக்கு புறப்பட்டது.ஆனால் இந்திய விமானப்படையின் பலத்தை அறிந்த உடன் பாககிஸ்தான் போர் விமானங்கள் பின் வாங்கியது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இடங்களில் மிராஜ் 2000 போன்ற போர் விமானங்களை வைத்து தாக்குதல் நடத்திய நிலையில் அதன் பின்னர் பாகிஸ்தான் குஜராத்தின் கூட்ச் பகுதியில் ட்ரோன் விமானத்தை உளவுபார்க்க அனுப்பியது.ஆனால் அந்த ட்ரோன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.ஏனென்றால் இந்தியா போர்விமானங்களை பயன்படுத்திய நிலையில் பாகிஸ்தான் ட்ரோன் விமானத்தை பயன்படுத்தி அதில் ஏமாற்றமும் அடைந்துள்ளது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…
கேரளா : பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவருக்கு அவரை காதலித்து வந்த கிரிஷ்மா கடந்த…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து அப்பகுதியில் 2வது விமான நிலைய முனையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய…