பாகிஸ்தான் உலகளாகிய பயங்கரவாதிகளை தியாகிகளாக புகழ்கிறது என ஐநா சபையில் இந்தியா கூறியுள்ளது.
அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபை 76 ஆவது கூட்டத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் ஆலோசகர் அமர்நாத் அவர்கள் பாகிஸ்தான் குறித்து பேசினார். அப்போது பேசிய அவர் பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி இங்கு அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து பேசுகிறார். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் ஓசாமா பின்லேடன் போன்ற உலகளாவிய பயங்கரவாதிகளை தியாகிகளாக கூறுகிறார்.
மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உட்பட இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறது. ஆனால் இந்தியாவுக்குள் நடக்கும் விவகாரங்கள் தொடர்பாக பதிலளிக்க இவை தகுதியற்றது. மேலும் பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உள்ள பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அண்டை நாடுகளுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவதாகவும் இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் குற்றம் சாட்டி உள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…