ஜம்மு-காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்துமாறு, தீவிரவாத இயக்கங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, தூண்டிவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து, எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படைகள் கடந்த சில நாட்களாக அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையில், காஷ்மீர் பகுதிகளில் தாக்குதல் நடத்துமாறு, தீவிரவாத இயக்கங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்லைப் பகுதி கிராமங்களில் பலத்தை அதிகரிக்குமாறு, ஜெய்ஸ் இ மொகமது, லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்களிடம் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அறிவுறுத்தியதுடன், பதான்கோட் போன்று மிகப்பெரிய தாக்குதலை நடத்த தூண்டிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு உதவிகரமாக செயல்பட சிறையில் இருந்து தலிபான் தீவிரவாதிகளை விடுவிக்கும் முயற்சியில் ஐ.எஸ்.ஐ. ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: கடந்த வாரம் முழுக்க ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாளாக இறக்கம் கண்டது.…
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து இன்று பிற்பகல் புயலாக மாறும் என வானிலை…
சென்னை : நீலகிரியில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார் குடியரசு…
வாஷிங்டன் : கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் - ஹமாஸ் போர் காசாவில் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில்…
சென்னை : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம்…