இந்திய கடற்படையில் அதிகாரியாக இருந்தவர் குல்பூஷண் ஜாதவ். 2016 ம் ஆண்டு பலுசிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து பாகிஸ்தானை உளவு பார்த்தாக கூறி பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டார். உளவு பார்க்கப்பட்ட பிரிவில் குல்பூஷண் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2017 ம் ஆண்டு அவரை தூக்கிலிட கோரி பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு எதிராக நெதர்லாந்தில் உள்ள தி ஹேங் என்னும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை உடனடியாக விசாரித்த சர்வதேச நீதிமன்றம் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க இடைக்கால தடை விதித்தது.
பின் ஜூலை 17-ஆம் தேதி இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியானது. சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதி ரீமா ஓவர் முன்னாள் நடந்த வழக்கின் விசாரணையில், குல்பூஷண் ஜாதவை தூக்கிலிடும் முடிவை பாகிஸ்தான் அரசு மறுபரிசினை செய்யுமாறு உத்தரவிட்டது. அதுவரை தூக்கிலிட தடை விதிப்பதாகவும் நீதிபதி தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தரப்பில் தகவல் ஓன்று தெரிவிக்கப்பட்டுள்ளது .அதில் இந்திய தூதரக அதிகாரிகளை சந்திப்பதற்கு குல்பூஷண் ஜாதவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .
இதனால் இந்திய தூதரக அதிகாரிகளை இன்று குல்பூஷண் ஜாதவ் சந்தித்து பேசுகிறார் .மேலும் தேவையான உதவிகளை பெறுவார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…