உ,பி போராட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபத்.. அப்போ பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்.. காவல் கண்காணிப்பாளர் ஆவேச பேச்சு

Default Image
  • மத்திய பாஜக  அரசு தற்போது கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள   பல நகரங்களில்  போராட்டங்கள் நடந்தன.
  • பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று கூறியதற்கு அந்த அதிகாரி விளக்கம்.

அவற்றில் பெரும்பாலானவற்றில் வன்முறை வெடித்தது. ஏராளமான பொதுச்சொத்துக்களும் கடுமையாக சேதப்படுத்தப்பட்டது.  இதிலும் குறிப்பாக  லக்னோ, மீரட் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்  ஏற்பட்டது. போராட்டத்தில் நடந்த வன்முறையில் இதுவரை 19 பேர் பலியாகினர். அதில், மீரட் நகரில் போராட்டம் நடத்தியவர்களை நோக்கி  காவல்துறை அதிகாரி ஒருவர் , “பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்” என்று கூறிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி  விமர்சனத்துக்கு உள்ளானது.

Image result for pakistan zindabad in up

இந்நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியும், மீரட் காவல்துறை கண்காணிப்பாளருமான  அகிலேஷ் நாராயணன் அளித்துள்ள விளக்கத்தில், 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் சிலர் காவல்துறையினர்  மீது கற்களை வீசி “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று  பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாகவும், பாகிஸ்தானை அவ்வளவு விரும்பினால் அங்கே சென்றுவிடுங்கள் என்று தான் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு ஆதரவாக கோசம் போடுவது இந்திய இறையாண்மைக்கு நல்லது இல்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்