200 இந்திய மீனவர்களை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு.!

Pakistan

அரேபிய கடல் எல்லையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 இந்திய மீனவர்கள் மற்றும் மூன்று சிவில் கைதிகளை பாகிஸ்தான் இன்று விடுவிக்கும் என்று வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி அறிவித்துள்ளார். நல்லெண்ண நடவடிக்கையாக இந்திய மீனவர்களை விடுவிக்க பாகிஸ்தான் முடிவு செய்தது.

கடந்த மாதம், பாகிஸ்தான் அதிகாரிகள் கராச்சியில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு 198 இந்திய மீனவர்களை வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எஞ்சிய தொகுதிகளை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி தனது டிவிட்டர் பக்கத்தில், பாகிஸ்தான் 200 இந்திய மீனவர்களையும் 3 சிவிலியன் கைதிகளையும் இன்று விடுவிக்கிறது. முன்னதாக, 198 இந்திய மீனவர்கள் 12 மே 2023 அன்று திருப்பி அனுப்பப்பட்டனர் என்று குறியிட்டுள்ளார்.

 

பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் ஏழ்மையான மீனவர்கள் மற்ற நாட்டு எல்லைகளுக்குள் அடிக்கடி அத்துமீறி நுழைவதால், இரு நாட்டு கடல் பாதுகாப்புப் படைகளும் அவர்களை அடிக்கடி கைது செய்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்