எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கி சுடு : தக்க பதிலடி கொடுத்த இந்தியா!
இன்று இந்திய முழுவதும் 73-வது சுதந்திர தினம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து இடங்களிலும் பாதுபாப்பு பலமாக போடப்பட்டு உள்ளது.குறிப்பாக இந்திய எல்லை பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டது.இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய இராணுவ வீரர்கள் துப்பாக்கி தாக்குதல்நடத்தி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தனர். இதனால் எல்லையில் பதட்டம் நிலவியது.