பாகிஸ்தான் , சீனா வரை சென்று தாக்கும் நீர்முழ்கி ஏவுகணை சோதனை வெற்றி .!
- நீர்மூழ்கி போர்க்கப்பலில் இருந்து சென்று இலக்கை தாக்கக்கூடிய கே-4 ஏவுகணையை வெற்றிகரமாக 2-வது முறையாக சோதனை செய்தது.
- இந்த ஏவுகணை சுமார் 3,500கி.மீ தொலைவு வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
நீர்மூழ்கி போர்க்கப்பலில் இருந்து சென்று இலக்கை தாக்கக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) தயாரித்து உள்ளது. இந்த ஏவுகணை சோதனையை ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் கடல் பகுதியில் இருந்து இந்தியா கே-4 ஏவுகணையை நீர்மூழ்கி கப்பலில் இருந்து வெற்றிகரமாக 2-வது முறையாக சோதனை செய்தது.
இந்த ஏவுகணை சுமார் 3,500கி.மீ தொலைவு வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. மேலும் பாகிஸ்தானின் எந்த பகுதியையும் , சீனாவின் பல பகுதிகளையும் நீருக்கு அடியில் இருந்து மறைந்து கொண்ட தாக்கும் திறன் கொண்டது.
இந்த கே-4 ஏவுகணை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி ஏவுகணை. இதற்கு முன் 700 கி.மீ தொலைவு வரை சென்று தாக்க கூடிய பிஓ-5 ஏவுகணை இந்தியாவில் தயாரித்த முதல் நீர்மூழ்கி ஏவுகணை ஆகும்.