இந்திய சிறையில் இருந்து 200 கோடிக்கு போதை பொருள் ஆர்டர்.! வசமாக சிக்கிய பாகிஸ்தான் படகு.!
குஜராத் துறைமுகத்தில் அருகில் இந்திய எல்லை அருகில், 200 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் இந்திய கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தியக் கடற்படை மற்றும் குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படையான ஏடிஎஸ்-வும் இந்திய கடல் எல்லையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது இந்திய கடல் எல்லைக்குள் ஆறு மைல் தொலைவில் சந்தேகத்தின் பெயரில் பாகிஸ்தான் படகை கைது செய்தனர்.
அந்த பாகிஸ்தான் படகை சோதனை செய்ததில் 40 கிலோ போதை மருந்து கணடறியப்பட்டுள்ளது. அதன் இந்திய மதிப்பு 200 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த போதை பொருட்கள் பஞ்சாப் சிறையில் இருந்து ஆர்டர் செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. படகில் இருந்த ஆறு பணியாளர்கள் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர், அக்டோபர் 2021-ல், குஜராத், முந்த்ரா துறைமுகத்தில் இருந்து 2,988 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 21,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.