பாகிஸ்தான் கடற்படையால் இந்திய மீனவர்கள் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
குஜராத்தின் போர்பந்தர் பகுதியில் இருந்து 6 படகுகளிலும் கிர் சோம்நாத் பகுதியிலிருந்து 2 படகுகளிலும் கடலுக்குச் சென்ற 49 மீனவர்கள் கடல் எல்லையை தாண்டியதாக செப்டம்பர் 15-ம் தேதி பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்களது 8 படகுகளையும் பாகிஸ்தான் கடற்படை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டினால் அவர்களுக்கு ஜி.பி.எஸ். கருவி மூலம் இந்திய கடற்படையினர் எச்சரிக்கை விடுகின்றனர்.ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது.மேலும், மீனவர்களுக்கு தங்கள் படகுகளில் ஜி.பி.எஸ் கருவியை பொருத்த மாநில அரசு ரூ. 20 ஆயிரம் மானியம் வழங்கி வருகிறது.
குஜராத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 30 ஆயிரம் மீன்பிடி படகுகளில் 5 ஆயிரம் படகுகளில் ஜி.பி.எஸ் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…