குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் பார்க்க பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.
இந்திய கடற்படையில் அதிகாரியாக இருந்தவர் குல்பூஷண் ஜாதவ். 2016 ம் ஆண்டு பலுசிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து பாகிஸ்தானை உளவு பார்த்தாக கூறி பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டார். உளவு பார்க்கப்பட்ட பிரிவில் குல்பூஷண் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2017 ம் ஆண்டு அவரை தூக்கிலிட கோரி பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு எதிராக நெதர்லாந்தில் உள்ள தி ஹேங் என்னும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.கடந்த ஜூலை 17-ஆம் தேதி இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியானது. சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதி ரீமா ஓவர் முன்னாள் நடந்த வழக்கின் விசாரணையில், குல்பூஷண் ஜாதவை தூக்கிலிடும் முடிவை பாகிஸ்தான் அரசு மறுபரிசினை செய்யுமாறு உத்தரவிட்டது. அதுவரை தூக்கிலிட தடை விதிப்பதாகவும் நீதிபதி தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தார்.
இந்த நிலையில் குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் பார்க்க பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது. இந்திய தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியா, குல்பூஷண் ஜாதவை சந்திக்க உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி கள்ளக்குறிச்சி : 22KV குருபீடபுரம் 22KV மலைகொத்தளம் 22KV லட்சியம்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக்தில் ஒரு சில தினங்களாக கனமழை…
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…