பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு சரிக்கு சமமான பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதற்கு முன்னதாகவே எதிரிகளை பாதுகாப்புப் படையினர் அழித்து விடுவதாக அவர் கூறினார். ஆனால் எல்லையில் ஒருவரும் ஊடுருவ முடியாது என்று தற்போதைக்கு கூறுவது சரியாக இருக்காது என்று தெரிவித்த நிர்மலா சீத்தாராமன், காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தைக் கைவிடுவது தொடர்பாக யோசனை ஏதுமில்லை என்றும் தெரிவித்தார்.
இதனிடையே மற்ற போர் விமானங்களுக்காக தேஜாஸ் ரக விமானங்கள் தயாரிப்பு நிறுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தேஜாஸ் மார்க் 2 போர் விமானங்களை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும், அவற்றின் உற்பத்தியை நிறுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…