பாகிஸ்தானுக்கு எல்லையில் சரிக்குச் சமமான பதிலடி!

Default Image

பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு சரிக்கு சமமான பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக  தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதற்கு முன்னதாகவே எதிரிகளை பாதுகாப்புப் படையினர் அழித்து விடுவதாக அவர் கூறினார். ஆனால் எல்லையில் ஒருவரும் ஊடுருவ முடியாது என்று தற்போதைக்கு கூறுவது சரியாக இருக்காது என்று தெரிவித்த நிர்மலா சீத்தாராமன், காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தைக் கைவிடுவது தொடர்பாக யோசனை ஏதுமில்லை என்றும் தெரிவித்தார்.

இதனிடையே மற்ற போர் விமானங்களுக்காக தேஜாஸ் ரக விமானங்கள் தயாரிப்பு நிறுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தேஜாஸ் மார்க் 2 போர் விமானங்களை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும், அவற்றின் உற்பத்தியை நிறுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்