இந்திய விமானப்படை தாக்குதல் !!கிண்டல் செய்து புகைப்படத்தை வெளியிட்ட பாகிஸ்தான் ராணுவம் !!
- பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய விமானப்படை.
- இந்திய தாக்குதலினால் சேதங்கள் இல்லை என்று பாகிஸ்தான் அதிகாரி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த 14 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதனால் அங்கு பதற்றம் நிலவியது.இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு மட்டும் மவுனம் சாதித்து வந்தது.
இந்நிலையில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே செயல்பட்டு வந்த பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய விமானப்படை .1000 கிலோ வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியதாக இந்திய விமானப்படை தெரிவித்தது .அதிகாலை 3.30 மணிக்கு இந்த அதிரடி தாக்குதலை இந்திய விமானப்படை நடத்தியதாக தெரிவித்தது.இந்திய விமான படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ரக போர் விமானம் மூலம் இந்த தாக்குதல் நடைபெற்றது.பகுதிகளில் இருந்த பயங்கரவாதிகள் 3 முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.மேலும் விமானப்படையின் தாக்குதலில் பயங்கரவாத தலைவர் மசூத் அசாரின் உறவினர் கொல்லப்பட்டார். ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
Payload of hastily escaping Indian aircrafts fell in open. pic.twitter.com/8drYtNGMsm
— DG ISPR (@OfficialDGISPR) February 26, 2019
இந்நிலையில் இது தொடர்பாக பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் தெரிவித்துள்ளார்.அதில் இந்திய தாக்குதலினால் சேதங்கள் இல்லை என்று சில புகைப்படங்களை மட்டும் வெளியிட்டுள்ளார்.இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.