வங்கதேசம்,பாகிஸ்தான் எல்லையில் வேலி அமைக்க திட்டம்!
எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைமை இயக்குநர் கே.கே.சர்மா பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதி முழுவதும் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் வேலியமைத்துப் பாதுகாப்புப் பலத்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான், இந்தியா – வங்கதேசம் இடையிலான எல்லையில் பல இடங்களில் வேலி அமைக்கப்படாமல் உள்ளதால் வேறு நாட்டவர்களும் தீவிரவாதிகளும் இந்தியாவுக்குள் ஊடுருவும் அபாயம் உள்ளது. போதைப்பொருள், ஆயுதங்கள் ஆகியவற்றைக் கடத்துவதற்கும் வாய்ப்பாக உள்ளது.
இதற்கு முடிவு கட்டும் வகையில் ஐந்தாண்டுகளுக்குள் இரு நாடுகளுடனான எல்லைப் பகுதி முழுவதும் வேலியமைக்கப்பட்டு ஒருங்கிணைந்த எல்லைப் பாதுகாப்பு மேலாண்மை முறைக்குள் கொண்டுவரப்படும் என்று எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைமை இயக்குநர் கே.கே.சர்மா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.