‘வலியற்ற மரணம்’ இறப்பதற்கு முன் கூகுளில் தேடிய சுஷாந்த் சிங்

Default Image

பிரபல பாலிவுட் நடிகர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ம் தேதி தனது வீட்டில் தூக்குமாட்டிய  நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் .அன்று முதல் அவர் இறப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகள் வந்த வண்ணமே உள்ளது .

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பதற்கு முன்  சில மாதங்களாக  இருமுனை கோளாறுக்கான(‘Bipolar Disorder)  மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்ததாகவும் , இந்த தகவல் மருத்துவர்களிடமிருந்து வெளிவந்துள்ளது என்று மும்பை போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஜூன் 8 தேதி அவரது முன்னாள் மேலாளர் திஷா சாலியன் 14 வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.சுஷாந்த் சிங் இறப்பதற்கு சிலமணி நேரம் முன் கூகுளில் அவர் பெயர் ‘painless death’, ‘Bipolar Disorder’ and ‘schizophrenia’ என்ற வார்த்தைகளை தேடியுள்ளதாக.இது அவரது மொபைல் போன் மற்றும் லேப்டாப்பில் இருந்து விவரங்கள் வெளிவந்துள்ளன.

மேலும் அவரது கூகிள் தேடல்களில், திஷா சாலியனுடன் அவரது பெயர் இணைத்து பேசப்படுகிறது என்ற நோக்கில் கவலைப்பட்டிருக்கலாம் என மும்பை போலீஸ் கமிஷனர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார் .

“அனைத்து கோணங்களும் விசாரணை நடத்தப்படுவதாகவும் தொழில்முறை போட்டி, நிதி பரிவர்த்தனைகள் அல்லது உடல்நிலை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் . அவரது மடிக்கணினி மற்றும் தொலைபேசியை தொழில்நுட்ப ஆதாரமாக எடுத்துள்ளோம், எல்லாவற்றையும் நாங்கள் ஆராய்வோம்” என்று மும்பை போலீஸ் கமிஷன திரு சிங் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்