பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!

பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறிய காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என ஜம்மு-காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.

j&k terror attack

பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் தான் பெரிய சோகமான விஷயமாக வெடித்திருக்கிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் விவரங்களை ஜம்மு காஷ்மீர் அரசு வெளியிட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உள்பட மொத்தமாக 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக 10 லட்சம் வழங்கப்படும் என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியாகி இருக்கும் அறிக்கையில் ” இந்த கொடூர சம்பவத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இழந்த விலைமதிப்பற்ற உயிர்களுக்கு இந்த நேரத்தில்  நாங்கள் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அன்புக்குரியவர்களின் இழப்பிற்கு எந்த பணமும் ஈடுசெய்ய முடியாது, ஆனால் ஆதரவு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக, ஜம்மு காஷ்மீர் அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறிய காயங்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும்” என அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் வீடுகளுக்குத் திரும்ப பலத்த பாதுகாப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. காயமடைந்தவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உங்கள் துயரத்தில் நாங்கள் பங்கேற்கிறோம், இந்த இருண்ட நேரத்தில் உங்களுடன் நிற்கிறோம். ஆனால் பயங்கரவாதம் எங்கள் உறுதியை ஒருபோதும் உடைக்காது. இந்த சம்பவத்திற்கு பின்னணியில் இருப்பவர்களுக்கு தன்குந்த தண்டனை வழங்கப்படும்” எனவும் அரசு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். அதனைத்தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கும் நேரில் சென்று அங்கு பாதிக்கப்பட்ட நபர்களுடைய குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்