டெல்லி : நம் நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் உள்ள நீதி தேவதைகளின் சிலையானது கண்கள் கட்டப்பட்டு, இடது கையில் தராசு, வலது கையில் வாள் என அமைந்திருக்கும். அதற்கு அர்த்தம் என்னவென்றால், ‘ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என எந்த ஒரு பாகுபாடுமின்றி நீதி வழங்கவேண்டும் எனவும் சரியான எடையில் தீர்ப்பை வழங்க வேண்டும் எனவும் அநீதியை அழிப்பதற்காகவே அந்த வாள்’ என்பதாகும். இந்த நிலையில், நேற்று உச்சநீதிமன்ற நூலகத்தில் நடந்த விழாவில் புதிய நீதி தேவதை […]
சென்னை : கடந்த 48 மணி நேரத்தில் இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஆகாச ஏர் நிறுவனங்களின் 10-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட்டில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பயணித்த ஹெலிகாப்டரும், பித்தோராகர் மாவட்டத்தில் அவசரமாக தற்போது தரையிறக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பையில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம் பாதுகாப்பு அச்சுறுத்தலால், அகமதாபாத்தில் தரையிறங்கியது. அந்த வகையில், டெலியில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்தம் […]
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 […]
டெல்லி : முன்னதாக ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்களை அடுத்து, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்திற்க்கான சட்டமன்ற பொதுத்தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநில தேர்தல் விவரங்கள் : மொத்த தொகுதிகள் : 81. மொத்த வாக்காளர்கள் – 2.6 கோடி. முதற்கட்ட தேர்தல் (43 தொகுதிகள்) : வேட்புமனு தாக்கல் தொடக்கம் – 18.10.2024. வேட்புமனு நிறைவு – 25.10.2023. வேட்புமனு வாபஸ் […]
சென்னை : வடகிழக்கு பருவமழை இன்று (அக்டோபர் 15) தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே, வடகிழக்கு பருவமழை இன்றோ நாளையோ தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தென்மேற்கு பருவமழை முழுவதும் நிறைவுபெற்று, தமிழகம், புதுவை, கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே, மழை வெளுத்து […]
டெல்லி : அக்டோபர் 31, 2019இல் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மத்திய பாஜக அரசு. அதற்கு பிறகு ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் சட்டசபையுள்ள தனி யூனியன் பிரதேசமாகவும் , லடாக் சட்டசபை அல்லாத தனி யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. சுந்திரத்திற்கு பிறகு, மன்னர் ராஜா ஹரி சிங் விருப்பத்தின் பெயரில் ஜம்மு காஷ்மீரில் அமலில் இருந்த சிறப்பு சலுகைகள் அனைத்தும் 2019இல் ரத்து செய்யபட்டன. அதற்கு பிறகு அங்கு […]
டெல்லி : கடந்த வருடம் ஜூன் மாதம் ஒடிசா மாநிலம் பால்சோர் மாவட்டத்தில் தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது சென்னை கோரமண்டல் விரைவு ரயில் மோதியது. இந்த ரயில்கள் மீது எதிர் திசையில் வந்தஹவுரா அதிவிரைவு ரயில் மோதிய கோர விபத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கர விபத்தை அடுத்து, இந்திய ரயில்வே துறை பல்வேறு பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. விபத்து குறித்து […]
சென்னை : திருவள்ளூர் ரயில் விபத்தில் பாக்மதி ரயில் லூப் லைனில் சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரயில் விபத்து தொடர்பாக மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “திருவள்ளூரில் நிகழ்ந்த மைசூரு – தர்பங்கா ரயில் விபத்து, ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தை பிரதிபலிக்கிறது என கூறியுள்ளார். ஒடிஷா ரயில் விபத்து போலவே கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்துள்ளது. பல விபத்துகளில், பல […]
மும்பை : பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா நேற்று இரவு உடல்நலக் கோளாறால் உயிரிழந்தார். அவரது இழப்பு இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் வாழ்நாளில் அந்த அளவிற்கு சாதனையையும், மனிதநேயம் மிக்க மனிதராகவும் செயல்பட்டிருக்கிறார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து […]
மும்பை : மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உயிரோடு இருந்த சமயத்தில் சம்பாதித்த பணங்களை பல நல்ல விஷயங்களுக்குக் கொடுத்து உதவி செய்து இருக்கிறார். வாரி வழங்கும் வள்ளலாக இருந்த ரத்தன் டாடா சொத்து மதிப்பு எவ்வளவு என்பது பற்றி தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. எனவே, அவருடைய வீட்டின் விலை மதிப்பு என்ன அவர் வைத்து இருக்கும் கார்கள் என்னவெல்லாம் என்பது பற்றியும் அவருடைய சொத்து மதிப்பு பற்றியும் இந்த பதிவில் விவரமாகப் பார்க்கலாம். சம்பளம் […]
மும்பை : மறைந்த தொழிலதிபரான ரத்தன் டாடா கூறிய பொன்மொழிகள் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக இருப்பதால் அவருடைய போன் மொழிகளை விரும்பி படிப்பது உண்டு. அப்படி அவர் இதுவரை சொன்ன 10 பொன்மொழிகள் பற்றிய விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம். “சரியான முடிவுகளை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் முடிவுகளை எடுத்து பின்னர் அவற்றைச் சரியாகச் செய்கிறேன்.” “வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் நம்மைத் தொடர மிகவும் முக்கியம், ஏனெனில் ஒரு நேர்கோட்டில், ஈசிஜியில் கூட, […]
மும்பை : மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தொழில் ரீதியாகப் பெரிய அளவில் பெயர் பெற்றதை விட, தன்னுடைய நல்ல குணத்தின் மூலமாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர். இதன் காரணமாகத் தான், அவர் இந்த மண்ணை விட்டு மறைந்த நிலையில், அவருக்காக எமோஷனலாக மக்கள் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் அவர் நேற்று காலமானார். இதனையடுத்து, ரத்தன் டாடா பற்றிய பல விஷயங்களும் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. அதனை மக்களும் […]
மும்பை : மறைந்த தொழிலதிபரான ரத்தன் டாடாவின் உடலை தற்போது பொது மக்களின் பார்வைக்காக மும்பையில் உள்ள என்.சி.பி.ஏ அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. ரத்தன் டாடாவின் மறைவு நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரத்தன் டாடாவின் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல முக்கிய தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் தனது வாழ்நாளில் பல சாதனைகள் செய்துள்ளார். மேலும், அவரது வாழ்நாளில் பல […]
மும்பை : பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு செய்தி வெளியானதுடன் பலரும் அவருடைய வாழ்க்கை விஷயங்கள் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதில் பலரும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவது என்றால் அவருடைய காதல் கதையையும், அவர் எதற்காகத் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார் என்பதைப் பற்றியும் தான். அவர் இறப்பதற்கு முன்பு உயிரோடு இருந்த சமயத்தில் கொடுத்த பழைய நேர்காணல் ஒன்றில், திருமணம் செய்து கொள்ளாதது பற்றியும், தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவங்கள் பற்றியும் வெளிப்படையாகவே […]
மும்பை: மூத்த தொழிலதிபர் ரத்தன் டாடா (86) உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார். டாடா குழுமத் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த அவர், 2012-ல் ஒய்வு பெற்றார். பல லட்சம் இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் உலக அரங்கில் திறமையான தொழிலதிபராகவும் திகழ்ந்த ரத்தன் டாடாவின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது, ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். […]
மும்பை : டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா நேற்று இரவு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்தியாவில் பிரபல தொழிலதிபராகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் மூலம் நல்ல மனிதராகவும் அறியப்படும் ரத்தன் டாடாவின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது இறுதி ஊர்வலம் இன்று மும்பையில் நடைபெற உள்ளது. அரசு முறை இறுதி சடங்கிற்கு முன்னதாக பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மும்பை NCPA மைதானத்தில் […]
மும்பை : இந்தியவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று இரவு பிரீச் கேண்டி மருத்துவமனையில் காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், ரத்தன் டாட்டா மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்கள். யாரெல்லாம் இரங்கலை தெரிவித்துள்ளார்கள் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” சில மனிதர்கள் வாழ்க்கை பாடப்புத்தகங்கள், […]
மும்பை : வயது முதிர்வு காரணமாக பல்வேறு உடல் கோளாறு காரணமாக கடந்த திங்கள்கிழமை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது உடல் நிலை சரியாக இல்லை என தொடர்ந்து செய்திகள் வந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) இரவு அவர் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, அவரது உடலை கொலாபாவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு […]
டெல்லி : போராட்ட களத்திலும், ஒலிம்பிக் மல்யுத்த களத்திலும் பல்வேறு தடைகளை எதிர்கொண்டு இதற்கு மேல் போராட தெம்பில்லை எனக் கூறினாலும், மக்கள் ஆதரவுடன் மக்களுக்கான பிரதிநிதியாக தலைநிமிர்ந்து புதுத் தெம்புடன் போராடி வென்றுள்ளார் காங்கிரஸ் கட்சியின் புதிய சட்டமன்ற உறுப்பினர் வினேஷ் போகத். நடந்து முடிந்த ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி, 10 ஆண்டுகால பாஜக ஆட்சியை தகர்த்து மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறின. ஆனால் அதனை பொய்யாக்கும் வண்ணம் பாஜக […]
டெல்லி : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 49, காங்கிரஸ் 36 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்படி, ஹரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக கட்சி. இந்நிலையில், ஹரியானாவில் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை. அது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த முடிவுகள் ஹரியானா மக்களின் விருப்பத்திற்கு எதிரான ஒன்றாகும். ஹரியானாவில் வாக்கு எண்ணும் செயல்முறை, மின்னணு வாக்குப்பதிவு […]