கேரளா: வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி, இன்று பிற்பகல் 12.30 மணியளவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இதற்காக ஒரு நாள் முன்பு (நேற்றைய தினம்) வயநாடு சென்றடைந்தார். அத்துடன் இடைத்தேர்தல் களத்தில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #வயநாட்டில் உள்ள ஒரு உள்ளூர் குடும்பத்திற்கு இதயப்பூர்வமான விஜயம் செய்து, சமூகத்துடனான அவரது இரக்கத்தையும் தொடர்பையும் வெளிப்படுத்தினார் அன்பு தலைவி […]
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் புயலாகவும் தீவிரமடையக்கூடும் எனவும் தெரிவித்திருந்தனர். மேலும், உருவாகவுள்ள புயலுக்கு டானா எனவும் பெயரிட்டுள்ளனர். இந்த டானா புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் அக்.-24 அன்று இரவு அல்லது அதற்கு அடுத்த நாள் அக்.-25ம் தேதி அதிகாலையில் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரைகளை கடக்க வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை […]
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்து இருந்தது. இதனையடுத்து, புயல் கரையை எப்போது கடக்கும் என்பது பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எப்போது கரையை கடக்கும் இதனால் எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு என்பது பற்றியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று (21-10-2024) மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் […]
டெல்லி : அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம் தனது பழைய லோகோவை மாற்றி புதிய லோகோவை இன்று, அக்.-22 (செவ்வாய்க்கிழமை) அறிமுகப்படுத்தி இருக்கிறது. அத்துடன், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 7 புதிய சேவைகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இன்று டெல்லியில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில், BSNL-ன் இந்த புதிய லோகோவையும், 7 புதிய அம்சத்தையும் அமைச்சர் ஜோதிராதித்ய தொடங்கி வைத்தார். புதிய லோகோ : […]
டெல்லி : 16வது ஆண்டு BRICS உச்சி மாநாடு இன்று ரஷ்யாவின் கசான் நகரில் தொடங்குகிறது. இந்த உச்சி மாநாடு இன்று முதல் அக்டோபர் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து உலகப் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவுள்ளனர். இந்நிலையில், 2 நாட்கள் அரசு முறை பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா புறப்பட்டுச் சென்றார். இப்பொது, ரஷ்யா […]
ஈரோடு : கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார். ஆனால், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி : தவெக மாநாட்டுப் பணிகளை பார்வையிட்டு வீடு திரும்பிய புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் விக்கிரவாண்டி சென்று மாலை வீடு திரும்பிய அவர், நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனே அவரை, குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது மறைவிற்கு தவெகவினர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அஞ்சலிக்காக வைக்கபட்டறிந்த சரவணனின் உடலை பார்த்து, அவரது மறைவை தாங்க […]
டெல்லி : கடந்த ஒரு வாரமாக இந்திய விமான நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. கடந்த 19ம் தேதி சுமார் 30 விமானங்கள் உட்பட, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து செல்லும் இண்டிகோ, விஸ்தாரா உள்ளிட்ட விமான நிலையங்களில் 90க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவதால் பயணிகளுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஆனால், இந்த […]
டெல்லி : தலைநகர் டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியில் செயல்பட்டு வரும் சிஆர்பிஎப் பள்ளியில் நேற்று பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. நல்வாய்ப்பாக இந்த வெடி விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து டெல்லி சிறப்புபிரிவு போலீசார், தேசிய புலனாய்வு குழுவினர், தேசிய பாதுகாப்பு படையினர் என பல்வேறு விசாரணை குழுவினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு சம்பவம் எப்படி நிகழ்ந்தது என வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து […]
டெல்லி : தலைநகர் டெல்லி காற்று மாசுவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானாவில் விவசாய நிலங்களில் எரிக்கப்படும் பயிர் கழிவுகள் காரணமாகவும், அதீத வாகன பயன்பாடு காரணமாகவும் டெல்லி காற்றின் தரம் மிக மோசமாக மாறி வருகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கள்) டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் AQI அளவீட்டின் படி 300ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக ஆனந்த் விஹாரி பகுதியில் AQI அளவீடு 361ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக சராசரி […]
பெங்களூரு: பெங்களூருவில் வெளுத்து வாங்கிவரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வகையில், ஒக்கலிபுரம், ரிச்மண்ட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில், பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நகரின் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக, பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்தும். இதனால், மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி […]
சோனாமர்க் : ஜம்மு & காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ககன்கிர் பகுதியில் வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கந்தர்பால் மாவட்டத்தில் ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 8 மணியளவில் தொழிலாளர்கள் தங்கள் முகாம்களுக்குத் திரும்பியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 2 பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், இரண்டு தொழிலாளர்கள் […]
டெல்லி : ரோகிணி நகர் பிரகாஷ் விஹாரில் இயங்கி வரும் CRPF பள்ளி முன்பு இன்று காலை 9.30 மணிக்கு பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அடுத்த சில நொடிகளிலேயே அங்கு புகை மண்டலம் சூழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை அடுத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வெடித்தது வெடிகுண்டா? அல்லது மர்மப்பொருளா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, தேசிய புலனாய்வுத் துறையினர் டெல்லி காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் […]
புதுடெல்லி: கடந்த ஒரு வாரமாக பல்வேறு இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் நிலையில், இன்றும் பல விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெவ்வேறு இடங்களுக்குச் சென்ற 6 விஸ்தாரா விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. விஸ்தாரா நிறுவனத்தின் மும்பையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் உள்ளிட்ட 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆறு விமானங்களின் பட்டியல் UK25 விமானம் (டெல்லி முதல் பிராங்பேர்ட்) UK106 விமானம் (சிங்கப்பூர் முதல் […]
ஒடிசா : வரும் அக்டோபர் 23-ஆம் தேதி வங்கக் கடலில் புதிய புயல் உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. அதாவது, வரும் 21-ஆம் தேதி வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது. அதன்பிறகு, இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து புயலாக மாறி வடக்கு வடமேற்கு திசையை நோக்கி கரையைக் கடக்கும் எனவும் கணிக்கப்பட்டு இருந்ததாக முன்னதாக […]
ஜார்க்கண்ட் : மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து, தேர்தலில் போட்டியிடம் கட்சிகள் அனைத்தும் தங்களுடைய அரசியல் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தேர்தலில், பாஜக கட்சி ஏஜேஎஸ்யு, எல்ஜேபி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. மொத்தமாக, ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் பாஜக 68 இடங்களில் போட்டியிடும். எஞ்சியுள்ள 13 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் எனவும் ஏற்கனவே, அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, […]
அசாம் : கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கு ரயில் விபத்து ஏற்பட்டது ஏன செய்திகள் வெளிவந்தாலும் நம் மனதைப் பதற வைத்து வருகிறது. அந்த ரயில் விபத்தைத் தொடர்ந்து சில இடங்களில் அவ்வப்போது, ரயில் விபத்து ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், அசாமில் இன்று ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. அசாமில் அகர்தாலா விரைவு ரயில் திபலாங் பகுதியில் தடம்புரண்டு விபத்து […]
கேரளா : 2024 நாடாளுமன்ற தேர்தலில் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும், உத்திர பிரதேசம் ரேபரேலி மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனை தொடர்ந்து வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி. காலியாக இருந்த வயநாடு மக்களவை தொகுதிக்கு அண்மையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலுடன் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. வரும் நவம்பர் […]
புதுடெல்லி : பொதுவாக ரயிலில் பயணம் செய்யவேண்டும் என்றால், ஒரு மாதங்களுக்கு முன்பாகவோ அல்லது அதற்கு கூடுதல் நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்தால் மட்டுமே டிக்கெட் கிடைக்கும். தற்போது ரயில்களில் நான்கு மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் விதி மாறியுள்ளது. ஆம், ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடர்பான புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்படி,விரைவு, அதிவிரைவு ரயில் உள்பட பல்வேறு ரயில்களில் பயணிக்க டிக்கெட்டை முன்கூட்டியே […]
ஹரியானா : மாநில முதல்வராக 2வது முறையாக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்றுக்கொண்டார். நடைபெற்று முடிந்த தேர்தலில் ஹரியானா மாநிலத்தில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்த நிலையில், ஏற்கனவே,முதலமைச்சராக இருந்த நயாப் சிங் சைனி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆனார். இவருடைய பதவியேற்பு விழா இன்று சண்டிகர் அருகே உள்ள பஞ்ச்குலாவின் பரேட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் […]