முசாபர்நகர்: விஜயதசமியை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியில் கங்கை நதியில் புனித நீராட சாதுக்கள் மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயதசமியை முன்னிட்டு புனித நதிகளில் சாதுக்கள் நீராடுவர். உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் கங்கை நதி பகுதியில் பல ஆசிரமங்களைச் சேர்ந்த சாதுக்கள் நீராட மறுத்துவிட்டனர். அப்பகுதியில் கங்கை நதியில் தொழிற்சாலை கழிவுகள் கலந்து கருப்பு நிறமாக மாறியிருந்தது. இதனால் சாதுக்கள் கங்கையில் நீராட மறுத்தனர். தற்போது முசாபர்நகர் நிர்வாகம் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள தொடங்கியுள்ளது.
டெல்லி: மகாத்மா காந்தியின் பிறந்தநாளான இன்று டெல்லியில் உள்ள அவரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. நம் தேசப் பிதா மகாத்மா காந்தியின் 148வது பிறந்தநாள் இன்று. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்திற்கு இன்று காலை சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளான இன்று அவருக்கும் அஞ்சலி செலுத்தினார் மோடி. இது குறித்து அவர் ட்விட்டரில் […]
தேசத்தின் மற்ற பகுதிகளுடன் காஷ்மீர் மக்கள் ஒன்றிணைவதற்கு அரசியல்சாசனத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல்சாசனத்தின் 370-ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்பதையே அவர் இவ்வாறு சூசகமாகத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் அந்த அமைப்பின் வருடாந்திர தசரா விழா சனிக்கிழமை நடைபெற்றது. பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்ற இவ்விழாவில் மோகன் பாகவத் […]
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் வருவதற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருப்பதை எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று கண்டு பிடித்தனர். ஜம்மு காஷ்மீரில் எல்லையை ஒட்டியுள்ள கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலமாக அந்நாட்டை சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனை தடுப்பதற்காக எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அர்னியா செக்டர் வழியே செல்லும் சர்வதேச எல்லையில் […]
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஸ்வைபிங் எந்திரம் மூலம், டெபிட், கிரெடிட் கார்டுகள் பண பரிமாற்றம் செய்வதை வலிந்து திணிப்பதன் மூலம் வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 3,800 கோடி இழப்பு ஏற்படும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே முதலீடு இல்லாமலும், வாராக்கடன்களாலும் தவித்து கொண்டு இருக்கும் வங்கிகளுக்கு கார்டுகள் மூலம் பணப்பரிமாற்றம் திட்டத்தை ஊக்கப்படுத்துவது மேலும் இழப்பில் கொண்டு போய் விடும். கள்ள நோட்டு, ஊழல், கருப்புபணத்தை […]
407-வது ஆண்டாக இந்த ஆண்டு வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது தசரா விழா. தேவி பராசக்தி சாமுண்டீஸ்வரியாக வடிவம் கொண்டு மகிஷனை சம்ஹாரம் செய்த இடமே மகிஷாபுரம், மஹிஷா மண்டலம், மஹிஷுர் என்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டு பின்னர் மைசூர் என்று மருவியது. மகிஷ வதம் நடைபெற்ற இந்த இடத்திலேயே நவராத்திரி விழா நடைபெறுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. நவராத்திரி ஒன்பது நாட்களும் சிறப்பான பூஜைகளும் கொண்டாட்டங்களும் நடைபெற்ற மைசூருவில் இறுதி நாளான பத்தாம் நாள் விஜயதசமி தினத்தன்று ஜம்பூ […]
புதுடில்லி: ரயில் பயணிகள் பாதுகாப்பு தான் மிகவும் முக்கியம். பணம் பிரச்னையில்லை என ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். ஆலோசனை: மஹாராஷ்டிர மாநிலம், மும்பையின் புறநகர் பகுதியான, பரேலில் உள்ள எல்பின்ஸ்டோன் ரோடு ரயில் நிலைய நடைபாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 23 பேர் பரிதாபமாக பலியாயினர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக மும்பையில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அதிகாரிகளுடன் 9 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதிகாரம்: இந்த கூட்டத்தில் […]
அகர்தலா நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் என்ற பெருமையை பெற்றிருந்த கேரளாவை பின்னுக்கு தள்ளி, திரிபுரா மாநிலம் முதலிடத்தை பிடித்து விட்டதாக அம்மாநில முதலமைச்சர் மாணிக் சர்க்கார் தெரிவித்துள்ளார்.சர்வதேச கல்வியறிவு நாளையொட்டி திரிபுரமாநிலத் தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் பங்கேற்றார். அப்போது பேசிய மாணிக் சர்க்கார் நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் என்ற பெருமையை பெற்றிருந்த கேரளாவை பின்னுக்கு தள்ளி, திரிபுரா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது என்று […]
டெல்லி: 15 இந்தியர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த குவைத் அரசுக்கு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். 119 இந்தியர்களின் தண்டனை காலத்தையும் குவைத் அரசு குறைந்த்துள்ளது என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். ஆனால் இதற்கான முயற்சிகளை எல்லாம் மேற்கொண்டது கேரளா இடது முன்னணி முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் மட்டுமே. அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்த காரியம் தன்னால் நடந்தது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி அரசு தனது தவறான பொருளாதார கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார். புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவை சேர்ந்தவர்களே மத்திய மோடி அரசின் பொருளாதார கொள்கையால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று சொல்லும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவே மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்தித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தை அவசரகதியில் அமல்படுத்தியுள்ளதால் […]
முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தற்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். பிரதமர் மோடியும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் இந்திய பொருளாதாரத்தை சிதைத்து விட்டார்கள் என்று பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சாமிபத்தில் பேசியிருந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த சின்ஹா ஆளும் பாஜக அரசை இவ்வாறு விமர்சித்தது சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அருண் ஜெட்லி பின்வருமாறு பேசியுள்ளார். சின்ஹா […]
மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தனது வீட்டுக்கு அருகில் உள்ள 25 வயது வாலிபனால் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் அந்த வாலிபனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டுக்கு வெளியே விளையாட சென்றார். அதன் பிறகு வெகுநேரமாகியும் அந்த சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி […]
புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் 400 போலீஸாரை பணியிடமாற்றம் செய்து டிஜிபி சுனில்குமார் கௌதம் உத்தரவிட்டார். புதுச்சேரி சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் டிஜிபி சுனில்குமார் கெளதம் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பண்டிகைக்காலங்களில் போலீசார் கடைகளில் மாமூல் வாங்குவது குறித்து பல புகார்கள் வந்தது. ஏற்கனவே போலீசார் இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி எச்சரித்திருந்தார். இதனைத்தடுக்கும் வகையில் புதுச்சேரி […]
ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த இளம்பெண் ஒருவரை காரில் கடத்தி சென்று 23 பேர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த 28 வயதான இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தான் புதிதாக வாங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை பார்வையிட்டுவிட்டு வீட்டுக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்ததாகவும், அப்போது காரில் வந்த இரண்டு இளைஞர்கள் தன்னை காரில் கடத்தியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் காரில் வைத்தே […]
டில்லியை சேர்ந்த பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.டில்லியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் ராஜஸ்தானின் பிகாநிர் பகுதியில் , கடந்த செப்., 25 அன்று சாலையில் நின்று கொண்டிருந்த போது, அங்கு காரில் வந்த சிலர் அந்த பெண்ணை காரில் கடத்தி சென்றனர். பின்னர், மேலும் சிலரை அழைத்து காரில் பலாத்காரம் செய்துவிட்டு கடத்திய இடத்தில் இறக்கிவிட்டு சென்றனர். இந்த பெண் நேற்று(செப்.,28) போலீசில் தன்னை 23 […]
புதுடில்லி: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற முடியாதவர், தன்னை விமர்சனம் செய்வதாகவும், கறுப்பு பணம் குறித்து நாட்டு மக்களை தவறாக வழிநடத்தவதாக பா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.ஜெட்லியின் நண்பர்:இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: நான் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தால், ஜெட்லி தற்போது நிதியமைச்சராக இருந்திருக்க முடியாது. முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் எனது நண்பர் இல்லை. ஆனால், அவர் ஜெட்லியின் நண்பர். ஜெட்லி எனது பின்னணி பற்றி மறந்துவிட்டார். அரசியலில் நுழைவதற்கு முன் பல […]
டெல்லி : இந்தியாவில் சிசுக்கள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 2016-ல் 1000-க்கு 34 என்ற அளவில் இந்தியாவில் சிசுக்கள் மரணம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மும்பை: எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. கூட்டத்தில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். தொடர் விடுமுறையால் மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் நேற்று முதலே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் மின் கசிவால் விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் பீதியடைந்த மக்கள் அங்கும் இங்குமாக முண்டியடித்துக்கொண்டு ஓடினர். மக்கள் ஓட்டத்தால் ரயில் நிலைய மேம்பாலத்தில் பெரும் கூட்ட […]
கேரளா வந்த ஷார்ஜா அதிபர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காஸிமியிடம் முதல்வர் பிணராயி விஜயன் ஷார்ஜா சிறைகளில் இருக்கும் இந்திய கைதிகளை விடுவிக்க வேண்டுகோள் வைத்ததும் அதை ஏற்று அவர் 149 பேரை விடுதலை செய்வதாக அறிவித்ததும் நாம் அறிந்ததே. இந்த விஷயத்தை தான் செய்ததாக மத்திய அமைச்சர் சுஷ்மாசுவராஜ் டூ வீட்டரில் எழுதி விட்டு கேரள மக்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கும் இந்த சுவாரசியங்களெல்லாம் ஒருபுறமிருக்க, முதல்வர் பிணராய் விஜயன் கைதிகளின் விடுதலை விஷயத்தில் அடுத்த […]
மகாராஷ்டிரா மாநிலத்தின் பயந்தர் பகுதியை சேர்ந்தவர் ராம்சரண் ராம்தாஸ் (21), போதை பழக்கத்துக்கு அடிமையான இவர் தனது உறவினர்கள் உட்பட 12 பேரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ராம்சரணை திருத்த அவர் தாய் முயன்றுள்ளார், ஆனால் பெற்ற தாய் மற்றும் வளர்ப்பு தாயையுமே ராம்சரண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இதனால் மகன் மேல் வெறுப்படைந்த தாய் அவரை கொல்ல முடிவு செய்து கூலிப்படைக்கு முன்பணமாக ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார். இதையடுத்து ராம்சரணை தனியாக அழைத்து சென்ற கூலிப்படையினர் […]