புதுதில்லி: தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நதிநீர் பங்கீடு வழக்கினை ஜூலை 18-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007- இல் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. இந்த விசாரணையானது தொடர்ந்து 15 வேலை நாள்களுக்கு நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி […]
ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா மற்றும் டெல்லி மாணவிகள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு சானிடரி நாப்கினை பார்சல் அனுப்பியுள்ளனர். ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால் சில பொருட்களின் விலை குறைந்துள்ளது. சில பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரியின்படி பெண்கள் பயன்படுத்தக்கூடிய சானிடரி நாப்கினுக்கு 12% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம், […]
டெல்லி :இந்திய-சீன எல்லையில் நிலவும் பதற்றம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் நாளை டெல்லியில் நடக்கிறது. அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏராளாமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் உதம்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரியும் நடவடிக்கையில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி: மலம் அள்ளும் தொழிலாளியாக இருந்த ஹரியானா பெண் ஒருவர் நன்கு படித்து கல்லூரி பேராசிரியராக உயர்ந்து சாதனை புரிந்துள்ளது எல்லோரையும் நெகிழ வைத்துள்ளது. கவுஷல் பன்வார் என்ற அந்த சாதனை பெண், தற்போது டெல்லியில் உள்ள மோதிலால் நேரு கல்லூரியில், சமஸ்கிருதப் பாடத்திற்கான உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். கவுஷல் பன்வார், ஹரியானா மாநிலத்தில் உள்ள கைதால் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜவுன்ட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். தலித் பிரிவின்கீழ் வரும் வால்மிகி பிரிவைச் சேர்ந்த பன்வார், […]
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் ஒருவர் தனது மனைவியை வைத்து சூதாடியுள்ளார். இதில் அவர் தோல்வியடைந்ததையடுத்து, வெற்றி பெற்றவர்கள் அவரின் மனைவியை பலாத்காரம் செய்து தங்கள் வெறியை தீர்த்துள்ளனர். காவல்துறையினர் நடத்திய பொதுமக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியில் ஒரு பெண் கற்பழிப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் சில நாட்களுக்கு முன்னர் எனது கணவர் என்னை வைத்து இரண்டு பேருடன் சூதாடியுள்ளார். இந்த சூதாட்டத்தில் அவர் தோல்வியடைந்துள்ளார். இதனையடுத்து சூதாட்டத்தில் வெற்றி பெற்ற அந்த இரண்டு நபரும் […]
கேரள நடிகை பாவனா கடத்தப்பட்டதன் பின்னணியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. கேரளாவில், கடந்த பிப்ரவரி மாதம் நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில், நடிகர் தீலீப் கைது செய்யப்பட்டுள்ளார். திலீப்பும், அவரின் முன்னாள் மனைவியுமான மஞ்சு வாரியர் மற்றும் பாவனா ஆகியோரும் ஒன்றாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர். அப்போதுதான் நடிகை காவ்யா மாதவன் மீது திலீப்பிற்கு காதல் ஏற்பட்டது. இதை மஞ்சு வாரியரிடம் பாவனா தெரிவித்துள்ளார். அதனால், […]
தெலங்கானா மாநிலத்தில் பில்லிசூனியம், மாந்திரீகம் செய்து வந்தவர் தனது 3 மகள்களையும் கொலை செய்துவிட்டு மனைவியுடன் சேர்ந்து அவரும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த கொமரய்யா என்பருக்கு 6-10 வயதுக்குள் 3 மகள்கள் இருந்தனர். இவர் மாந்திரீகம், பில்லிசூனியம் போன்ற காரியங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இதைக் கண்டித்த உறவினர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கொமரய்யா தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவமானமடைந்த கொமரய்யா தனது குழந்தைகளின் கழுத்தை நெறித்து கொலை […]
பெங்களூர்: பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் சசிகலா உள்ளிட்டோருக்கு சிறப்பு சலுகை காட்டப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து உயர்மட்ட குழு விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா. இவருக்கு சிறைக்குள் தனி கிச்சன் உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக, சிறைத்துறை டிஜிபி ஹெச்எஸ்என் ராவ், சசிகலா தரப்பிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிறை டிஐஜி […]
புதுடில்லி : 2022 ஆம் ஆண்டிற்குள் நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என மாநில தலைமை செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். திட்டங்களின் செலவுகள் அதிகரித்து வருவதாகவும், அதனால் மத்திய அரசின் திட்டங்கள் தாமதமாவதை நாட்டு மக்கள் மறந்து விடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 2022ஆம் ஆண்டு நாட்டின் 75வது சுதந்திர தினத்தை நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாட உள்ளனர். அதற்குள் அனைத்து துறைகளும், தங்களின் துறைகளில் […]
திருவனந்தபுரம்: முன்னாள் குடியரசுத்தலைவரும், விண்வெளி ஆராய்ச்சியாளருமான மறைந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அய்யா அவர்களின் நினைவாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புதிய அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கலாமின் கோட்பாடுகளை பிரபலப்படுத்தும் அமைப்பான டாக்டர் கலாம் ஸ்மிருதி இண்டர்நேஷனல் மூலம் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு, டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம், என பெயரிடப்பட்டுள்ளது.இளைஞர்களிடையே எதிர்காலத்தை பற்றி அதிக விழிப்புணர்வை ஏற்படுத்திய கலாமின் மிகவும் அரிதான புகைப்படங்கள், ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் மாதிரி வடிவங்கள் […]
மும்பை : இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக சென்செக்ஸ் 32,000 புள்ளிகளை எட்டிப்பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டியும் 9,900 புள்ளிகளை எட்டி உள்ளது.1999ம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக ஜூன் மாதத்தில் பணவீக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக தொடர்ந்து 4வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின.இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஜூலை 13, காலை […]
நாக்பூர்: மராட்டிய மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஒருவர் தாக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் உள்ள பர்சிங்கி என்னும் இடத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அந்த நபர் வீட்டுக்கு வாங்கி வந்த ஆட்டிறைச்சியை மாவட்டிறைச்சி என்று தவறாக கருதி 6, 7 பேர் கொண்ட கும்பல் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் ரத்த காயமடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்து 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு […]
பெங்களூரு: பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டது என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என டி.ஐ.ஜி., ரூபா கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், எனக்கும், டி.ஜி.பி.,க்கும் தனிப்பட்ட பிரச்னை ஏதும் இல்லை. இது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். நான் ஆதாரம் இல்லாமல் புகார் கூறவில்லை. நான் எந்த விதிகளையும் மீறவில்லை. சிறையில் விவிஐபி சலுகை பெற சசிகலா சார்பில் ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது. சிறையில் என்ன நடந்தது என்பது பற்றி […]
பெங்களூரு: சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அபத்தமானது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தனக்கு சிறப்பு வசதிகள் செய்து தருவதை சசிகலா ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். சசிகலாவுக்கு பெங்களூரு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டியுள்ளார். இதற்காக டிஜிபி சத்தியநாராயணா, சசிகலா குரூப்பிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணா […]
கோவாவில் இருட்டறையில் 20 ஆண்டுகளாக நிர்வாண நிலையில் அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவா தலைநகர் பனாஜியை அடுத்த, கன்டோலிம் என்ற கிராமத்தில், பெண் ஒருவர் தனியறையில், 20 ஆண்டுகளாக, அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக, தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில்,தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் கூறிய வீட்டில், அதிரடி சோதனை நடத்திய போலீசார், இருட்டறையில், நிர்வாண கோலத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த 50 வயது […]
உலகிலேயே பணக்காரக் கடவுள் என்று வணங்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அறைகளை வாடகைக்கு விடுவதில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. திருப்பதி செல்வோருக்கு வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பதால் விடுமுறைக் காலங்கள் மட்டுமின்றி எப்போதுமே பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கோவில் என்ற சிறப்பை பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்தக் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருவோருக்கு புதிய திட்டத்தை தேவஸ்தானம் அமல்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் சார்ல் திருமலையில் 6200 அறைகள் உள்ளன. […]
ஜம்மு: காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின், புர்கி பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து சென்றனர். அவர்கள் சென்ற கான்வாயை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த எதிர்பாராத தாக்குதலினால் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.