#BREAKING : பத்மநாப சுவாமி கோயில் வழக்கு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
பத்மநாபசாமி கோவிலை திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையிலான குழு நிர்வகிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள ஐகோர்ட் 2011-ம் ஆண்டு, நாட்டில் புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று அளித்த தீர்ப்புக்கு எதிராக, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், இந்து மல்ஹோத்ரா, யு.யு.லலித் ஆகியோர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக 9 ஆண்டுகளுக்குப்பின் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் பத்மநாபசாமி கோவிலின் திறப்பது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.அப்பொழுது நீதிமன்றம், நீதிபதி தலைமையிலான குழு நிர்வகிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையிலான 5 பேர் குழு பத்மநாபசாமி கோவில் நிர்வாகத்தை கவனிக்கும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. மேலும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை நிர்வகிக்கும் உரிமை உள்ளது என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில், கோயிலின் நான்கு நிலத்தடி பாதாள அறைகளில் தங்க ஆபரணங்கள், பாத்திரங்கள், நகைகள் மற்றும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள விலைமதிப்பற்ற கற்கள் உள்ளன என்று ஒரு ஆய்வின் போது தெரியவந்தது. இதனையடுத்து, வரலாற்று கோயிலின் பெட்டகத்தை திறப்பது குறித்து உச்ச நீதிமன்றம் எதுவும் அளிக்கவில்லை.