பத்மஸ்ரீ விருது வென்ற நிர்மல் சிங் கல்சா கொரோனா வைரசால் உயிரிழப்பு.!
பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸில் உள்ள சீக்கிய புனிதத்தலமான பொற்கோயிலின் முன்னாள் ஹசூரி ராகியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான நிர்மல் சிங் கல்சா என்பவர் கொரோனா வைரசால் உயிரிழந்தார். பத்மஸ்ரீ விருது வென்ற 62 வயதான சீக்கிய ஆன்மீக பாடகர் நிர்மல் சிங் பஞ்சாபில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் வெளிநாட்டுக்கு சென்று சமீபத்தில் இந்தியா வந்துள்ளார். பின்னர் இவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.
இவரது உடல் நிலை நேற்று கவலைக்கிடமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இவர் நேற்று மாலை 4.30 மணிக்கு பலியாகியுள்ளார். மேலும் இவர் பஞ்சாபில் உள்ள குருநானக் தேவ் மருத்துவமனையில் மூச்சுத்திணறல் மற்றும் தலைசுற்றல் காரணமாக மார்ச் 30ம் தேதி அனுமதிக்கபட்டார். பின்னர் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது என்பது குறிப்பிடப்படுகிறது.