பத்மாவத் படத்தை திரையிடுவதற்கு தடை !மீண்டும் சோகத்தில் மூழ்கிய படக்குழு ….
பத்மாவத் திரைப்படத்தை மலேசியாவில் திரையிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் தீபிகா படுகோன் நடித்துள்ள இந்தப் படத்தில் அலாவுதீன் கில்ஜியை மிகவும் கொடியவராகக் காட்டப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் அவர்களின் மத உணர்வைத் தொடும் வகையிலான படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது என மலேசியத் திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவர் முகமது சாம்பேரி அப்துல் அசீஸ் தெரிவித்துள்ளார்…
இந்நிலையில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே பத்மாவத் திரைப்டம் வசூலில் சாதனை படைத்துள்ளது .
சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், சாகித் கபூர் ஆகியோர் நடித்த இந்தப் படத்தைத் திரையிடுவதற்கு ராஜ்புத் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
ஒருசில மாநிலங்கள் படத்தைத் திரையிட விதித்த தடைகளை உச்சநீதிமன்றம் நீக்கியதுடன் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி பத்மாவத் படம் திரையிடப்பட்டது. திரையிட்ட முதல் நாளில் 19கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 32கோடி ரூபாயும் மூன்றாவது நாளில் 27கோடி ரூபாயும் ஈட்டியுள்ளது. நான்காம் நாளான ஞாயிற்றுக் கிழமையுடன் மொத்த வசூல் 110கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
இத்தனைக்கும் குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் காரணமாகப் பெரும்பாலான திரையரங்கங்களில் பத்மாவத் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….