ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தற்போது திகார் சிறையில் சிபிஐ விசாரணையில் உள்ளார். அவர் கடந்த 5ம் தேதி முதல் திகார் சிறையில் விசாரணைக் உட்படுத்தப்பட்டுள்ளார்.
இன்னும் 8 நாட்கள் அவர் திகார் சிறையில் இருக்க வேண்டி உள்ளது. இந்நிலையில் தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு கொடுத்துள்ளார். கடந்த 5 நாட்களாக டெல்லி உயர் நீதிமன்றம் தொடர் அரசு விடுமுறை என்பதால் இன்று அந்த ஜாமீன் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவில் ப.சிதம்பரம் தரப்பில், ‘தான் சிபிஐ அழைத்த அனைத்து விசாரணைக்கும் முறையாக ஆஜராகி உள்ளேன். சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். மேலும், பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை இரண்டு வருடங்களுக்கு முன்பு வழக்காக தொடர்ந்து கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைத்து, தற்போது இந்த விசாரணை நடத்தபடுவது உள்நோக்கம் கொண்டது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்ஜாமீன் வழக்கு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…