ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கொரோனோ வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைக்கு பி.வி. சிந்து 10 இலட்சம் நன்கொடை…
இந்தியாவையே ஆட்டிபடைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அடிக்கடி கைகழுவ வேண்டும் கடந்த 18ஆம் தேதி செயல் விளக்கம் செய்து காட்டினார் இந்திய பேட்மிட்டன் வீராங்கனையான பி.வி. சிந்து. மேலும் அவர் இது போன்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோக்களை மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் வெளியிட வேண்டும். எனது இத்தகைய சவாலை ஏற்க வேண்டும் என்றும் அவர் பதிவிட்டிருக்கிறார். உடனே சிந்துவின் சவாலை ஏற்றுக்கொண்ட மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, தானும் கைகழுவது போல் உள்ள வீடியோ காட்சியை டுவிட்டரில் வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வரும் தெலுங்கானா மற்றும் ஆந்திரா அரசுகளுக்கு தலா ரூ .5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து. இவரின் இந்த செயல் தற்போது சமுக வலைதளங்களில் மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது.