ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னால் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு ஆகியவை வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்குகளில் 3 மாதங்களுக்கு மேல் தலைநகர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் முன்னால் நிதி அமைச்சர் ப. சிதம்பரம். இவர் தற்போது இந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள முன்னால் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் ஏர் இந்தியா விமானங்கள் கொள்முதல் முறைகேடு குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் புதிதாக வழக்கு விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.கடந்த 2007 ஆம் ஆண்டு பிரதமராக மன்மோகன்சிங் பதவி வகித்த போது ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு ஏர்பஸ் விமானங்கள் வாங்கப்பட்டன.இந்த கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ வழக்குகள் பதிவு செய்துள்ளன.
இவ்வழக்கு தொடர்பாக விமானப் போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் பிரபுல் பட்டேலிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விசாரனையில் முன்னால் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழுவே ஏர் பஸ் விமானங்களை வாங்கியது என கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்னால் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் சிதம்பரத்திடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று பல மணிநேரம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…