ஏர் பஸ் முறைகேடு முன்னால் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்திடம் அமலாக்க துறை அதிரடி விசாரனை.. ஜாமினில் வெளிவந்தவருக்கு அடுத்த அதிரடி..

Default Image
  • அடுத்த வழக்கில் சிக்கும் முன்னால் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
  • அமலாக்கத்துறை அதிரடி விசாரனை.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னால் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மீது சிபிஐ மற்றும்  அமலாக்கப் பிரிவு ஆகியவை வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்குகளில் 3 மாதங்களுக்கு மேல் தலைநகர் டெல்லியில் உள்ள  திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் முன்னால் நிதி அமைச்சர் ப. சிதம்பரம்.  இவர் தற்போது இந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள முன்னால் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் ஏர் இந்தியா விமானங்கள் கொள்முதல் முறைகேடு குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் புதிதாக வழக்கு விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.கடந்த  2007 ஆம் ஆண்டு  பிரதமராக மன்மோகன்சிங் பதவி வகித்த போது ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு ஏர்பஸ் விமானங்கள் வாங்கப்பட்டன.இந்த கொள்முதலில்  முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ வழக்குகள் பதிவு செய்துள்ளன.

Related image

இவ்வழக்கு தொடர்பாக விமானப் போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் பிரபுல் பட்டேலிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விசாரனையில் முன்னால் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழுவே ஏர் பஸ் விமானங்களை வாங்கியது என கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்னால் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் சிதம்பரத்திடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று பல மணிநேரம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்