ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனு தள்ளபடி செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்து விட்டார்.மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.
ரமணா மறுப்பு தெரிவித்த நிலையில் சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை உடனே விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்துவிட்டார். பின் உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தரப்பில் மீண்டும் முறையிடப்பட்டது.ஆனால் நீதிபதி ரமணாவிடம் பதிவாளரிடம் மனுவில் பிழை உள்ளது என்று தெரிவித்தார்.பின்னர் பதிவாளர் மனுவின் பிழையை சரி செய்து நீதிபதியிடம் தெரிவித்தார். பின் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற வாய்ப்பு இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை பட்டியலில் பா.சிதம்பரத்தின் வழக்கு பட்டியலிடப்படாததால், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பில்லை என ஏற்கனவே உச்சநீதிமன்றம் சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது இந்த வழக்கு, நாளை மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…