ஏழைகளை பற்றி கவலைப்படாத மனிதாபிமானமில்லாத அரசு?! – டிவிட்டரில் ப.சிதம்பரம் சாடல்.!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தினசரி வேலை செய்பவர்கள், கட்டட வேலை செய்பவர்கள் என பலரும் இதனால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்படுகின்றனர்.
இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவ வருகிறது. இந்நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து தமிழில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
அதில், ‘ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஏழைகளின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டது. அவர்களுக்கு நாள் ஊதியமோ வருமானமோ கிடையாது
அரசின் முதல் கடமை ஏழைக் குடும்பங்களின் கைகளில் பணத்தைச் சேர்ப்பது. இதைச் செய்ய முடியும், செய்ய வேண்டும். எத்தனை முறை இதனை நாங்கள் வலியுறுத்தினாலும் அரசு எங்கள் கருத்தை ஏற்க மறுக்கிறது.
இதனைச் செய்யாத வரை இந்த அரசு ஏழைகளைப் பற்றிக் கவலைப்படாத, மனிதாபிமானமில்லாத அரசு என்று தானே கருத வேண்டும்? ‘ என தனது கருத்தை ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார். </di
ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஏழைகளின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டது. அவர்களுக்கு நாள் ஊதியமோ
வருமானமோ கிடையாதுஅரசின் முதல் கடமை ஏழைக் குடும்பங்களின் கைகளில் பணத்தைச் சேர்ப்பது. இதைச் செய்ய முடியும், செய்ய வேண்டும்.
— P. Chidambaram (@PChidambaram_IN) April 8, 2020
v>