சிறையில் இருக்கும் ப. சிதம்பரம் டிவிட்டர் பக்கத்தில் இந்திய பொருளாதாரத்தை விமர்சித்து அதிரடி ட்வீட்!
ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் முன்னாள்மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தற்போது திகார் சிறையில் உள்ளார். அவர் மீது சிபிஐ விசாரணை நடந்துதி வருகிறது. இன்னும் 8 நாட்கள் திகார் சிறையில் விசாரணைக்கு உட்படுத்த உள்ளார்.
இந்நிலையில் இன்று அவரது டிவிட்டர் கணக்கில் இருந்து, ‘வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது , ஊதியம் குறைவாக உள்ளது, முதலீடு குறைவாக உள்ளது, வர்த்தமும் குறைவாக உள்ளது இதனால், ஏழைகளும், நடுத்தர மக்களும்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சரிவில் இருந்து நாட்டை மீட்பதற்கான திட்டம் எங்கே இருக்கிறது,’ எனவும்,
‘இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிக்க கூடிய வகையில் உள்ளது எனவும், இந்திய பொருளாதார சரிவால் ஏழைகள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.’ எனவும் அந்த டீவீட்டில் பதியப்பட்டுள்ளது. இந்த பதிவு ப.சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினரால் போடப்பட்டுள்ளது.
I am deeply concerned about the economy.
The poor are the worst affected. Lower incomes, fewer jobs, less trade and lower investment affect the poor and the middle class. Where is the plan to get the country out of this decline and gloom?
— P. Chidambaram (@PChidambaram_IN) September 11, 2019