இந்திய அரசியல் சட்டத்தை பாஜக மாற்ற முயற்சிக்கிறது.! ப.சிதம்பரம் கடும் விமர்சனம்.!

Default Image

இந்து மகாசபை, பாரதிய ஜனசங்கம், பாஜக உள்ளிட்ட யாருமே அரசியல் சாசன வடிவமைப்பு குழுவில் உறுப்பினர் கிடையாது. பாஜகவிற்கு, நாடாளுமன்ற மாநிலங்களவை மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு எனும் பெருபான்மை இல்லை. இந்த தடை மட்டும் இல்லையென்றால் அரசியல் சாசனத்தை எப்போதோ மாற்றியிருப்பார்கள். – முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். 

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், ‘இந்திய அரசியலமைப்பு பாதுகாப்பு நடைபயணம்’ எனும் பெயரில், சென்னை சத்திய மூர்த்தி பவனில் இருந்து 3 நாட்கள் நடைபயணமாக 75 கிலோ மீட்டர் வரை செல்ல உள்ளானார். இந்த நடைபயணம், சென்னை சத்திய மூர்த்தி பவன் தொடங்கி அண்ணாசாலை, ஜிம்சன், பெரியார் திடல், புரசைவக்கம், செனாய் நகர், கோயம்பேடு, அம்பத்தூர், ஆவடி, மதுரவயல், பூந்தமல்லி வழியாக சென்று மூன்றாவது நாள் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடத்தை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைபயணம் தொடக்கவிழாவிழாவானது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கலந்துகொண்டார்.

அதில் அவர் பேசுகையில்,’ அண்ணல் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அமைக்கும் குழு அமைக்கப்பட்டது. இதில் மல்லாடி கிருஷ்ணசாமி, என்.கோபால்சாமி ஆகிய தமிழர்கள் உட்பட 70 பேர் இருந்தனர். அரசியல் சாசன நூலை வணங்கி பிரதமராக மோடி பதவியேற்றுகொண்டார். அதற்காக இந்த அரசியல் சாசனம் மீது அவருக்கு நம்பிக்கை உள்ளது என்று நினைத்து விடாதீர்கள்.

இந்து மகா சபை, பாரதிய ஜனசங்கம், பாஜக உள்ளிட்ட யாருமே அரசியல் சாசன வடிவமைப்பு குழுவில் உறுப்பினர் கிடையாது. அவர்களது பங்களிப்பு இல்லாததால் இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அரசியல் சாசனத்தை அவர்கள் சிதைக்கிறார்கள்.

பாஜகவிற்கு, நாடாளுமன்ற மாநிலங்களவை மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு எனும் பெருபான்மை இல்லை. இந்த தடை மட்டும் இல்லையென்றால் அரசியல் சாசனத்தை எப்போதோ மாற்றியிருப்பார்கள். பெரும்பான்மை பெற்றால் அரசியல் அமைப்பின் அடிப்படையாக இருக்கும் சட்டப்பிரிவு 14, 19, 21, 25, 26 ஆகிய 5 சட்டங்களை நிச்சயமாக சிதைத்து இருப்பார்கள் ” என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்